twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரமுக்கு ஃப்ரெண்ட்.. வரலட்சுமிக்கு கணவர்.. - 'கபாலி' விஷ்வந்த் பேட்டி #Exclusive

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 'அட்டக்கத்தி' படத்தில் தினேஷுக்கு அண்ணனாக ஐஷ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியானவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'கபாலி' படத்தில் மெட்ராஸ் இளைஞனாக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

    'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தில் ஹீரோ, 'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரமின் நண்பர் என நல்ல கிராஃபில் வளர்ந்து வரும் நடிகர் விஷ்வந்த் தற்போது விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

    'கபாலியின் அடையாளம்' என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவால் பாராட்டப்பட்ட விஷ்வந்த்திடம் பேசினோம். அவரது அடுத்த படங்கள், வாய்ப்புகள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டவை இங்கே...

    'சண்டக்கோழி 2' படம் நடிச்சு முடிச்சிட்டீங்களா?

    'சண்டக்கோழி 2' படம் நடிச்சு முடிச்சிட்டீங்களா?

    " 'சண்டக்கோழி 2' படத்துக்கு 60% ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. படத்தில் என்னோட போர்ஷன் இன்னும் கொஞ்சம் ஷூட் பண்ணவேண்டியது இருக்கு. என்னோட ரோல் ஒரு போல்டான கிராமத்து இளைஞர் கேரக்டர். இந்தப் படத்தில் டிபிக்கல் மதுரைக்காரனா நடிச்சிருக்கேன். வரலட்சுமி எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. 'கபாலி' படத்துல மெட்ராஸ்காரனா பண்ணேன், அந்தப் படத்துல நல்ல அங்கீகாரம் கிடைச்சது. இந்தப் படம் வந்ததுனா என்னை மதுரைக்காரன்னு சொல்வாங்க."

    லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பது பற்றி?

    லிங்குசாமி இயக்கத்தில் நடிப்பது பற்றி?

    "ஒரு ஃபைட் சீன் பண்ணும்போது உங்க கண்ணு செமையா இருக்குனு சொன்னார் லிங்குசாமி சார். ஒவ்வொரு நடிகனையும் ஃப்ரேம்குள்ள அவ்வளவு ரசிக்கிறாங்க. அதுனாலதான் ஒரு நல்ல படத்தைக் கொடுக்கமுடியுது. ஹீரோ, ஹீரோயின் அளவுக்கு எல்லா நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அதுதான் எங்களை மாதிரி நடிகர்களுக்கு பெரிய மோட்டிவேஷன். லிங்குசாமி சார் படத்தை நான் வெளியிலிருந்து பார்த்து ரசிச்சிருக்கேன். கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்து தட்டிக்கொடுக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரஞ்சித் அண்ணனே லிங்குசாமி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர ட்ரை பண்ணிட்டு இருந்தேன்னு சொல்லிருக்கார். இன்னிக்கு அந்த இயக்குநர் படத்துல நாம நடிக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு."

    'சண்டக்கோழி 2' ஷூட்டிங் ஸ்பாட்டில் லிங்குசாமி சார் என்ன சொன்னார்?

    'சண்டக்கோழி 2' ஷூட்டிங் ஸ்பாட்டில் லிங்குசாமி சார் என்ன சொன்னார்?

    "கரெக்ட்டான ஒரு ஆர்டிஸ்ட்டை இந்த கேரக்டருக்கு செலக்ட் பண்ணிருக்கோம்னு லிங்குசாமி சார் ஷூட்டிங் ஸ்பாட்ல சொன்னார். காஸ்ட்யூம் போட்டதுக்கு அப்புறம் நான் இந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா இருக்கிறதா சொன்னார். என்னை சென்னை ஸ்லாங்ல பேசித்தான் அவர் பார்த்திருக்கார். மதுரை ஸ்லாங்ல என்னை பார்க்கிறப்போ ரொம்ப ஹேப்பி ஆகிட்டார். மானிட்டர்ல உட்கார்ந்து என் போர்ஷன் வர்றப்போ பயங்கர குஷியா இருந்தார். என்னைக் கூப்பிட்டு தட்டிக் கொடுத்து ஹக் பண்ணி நல்லா பண்றீங்க விஷ்வந்த்னு பாராட்டினார். ராஜ்கிரண் சார், வரலட்சுமி மேடம், எல்லோர் முன்னாலேயும் அப்ரிஷியேட் பண்ணார்."

    விஷால், வரலட்சுமி உங்ககிட்ட என்ன சொன்னாங்க?

    விஷால், வரலட்சுமி உங்ககிட்ட என்ன சொன்னாங்க?

    "விஷால் சார் கூட இன்னும் எனக்கு சீன் வரலை. அவர் நிறைய வேலைகள்ல பிஸியா இருக்கார். இருக்கிற பிரச்னைகளையெல்லாம் தீர்த்துட்டா சினிமாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. வரலட்சுமிக்கு ஜோடியா இந்தப் படத்துல புது லுக்ல நடிச்சிருக்கேன். கதையோட முக்கியமான கதாபாத்திரம் பண்றேன். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கும். ரொம்ப போல்டான ரோல். வரலட்சுமி மேம், நல்லா பண்றீங்க.. உங்க கண்ணு பயங்கரமா இருக்குனு சொன்னாங்க."

    'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரமுக்கு நண்பரா நடிச்சது பற்றி?

    'ஸ்கெட்ச்' படத்தில் விக்ரமுக்கு நண்பரா நடிச்சது பற்றி?

    "தமிழ் சினிமாவில் விக்ரம் சார் மோஸ்ட் டெடிகேட்டட் நடிகர். அவர் கூட நடிச்சது அதுவும் அவரோட ஃப்ரெண்டா நடிச்சது ரொம்ப சந்தோஷமான விஷயம். அவரும் என்னை நிறைய பாராட்டியிருக்கார். 'ஸ்கெட்ச்' படம் பண்ணும்போது, உங்க நடிப்பு யதார்த்தமா இருக்கு, டெடிகேட்டடா வொர்க் பண்றீங்கனு சொல்லிப் பாராட்டினார். பெரிய ஹீரோக்கள் அந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அதோட மதிப்பே வேற இல்லையா?"

    அடுத்த படங்கள்?

    அடுத்த படங்கள்?

    "அடுத்து இன்னும் மூணு பெரிய படங்கள்ல ஓகே சொல்லியிருக்கேன். டேட் கொடுத்ததுக்கு அப்புறம் என்னென்ன படங்கள்னு வெளிப்படையா சொல்றேன். ஹீரோவா பண்றதுக்கு ஸ்கிரிப்ட் கேட்டுட்டு இருக்கேன். ஹீரோவா பண்ணாலுமே கேரக்டர் ரோல்களை மிஸ் பண்ணமாட்டேன். அனுபவமிக்க ஹீரோக்கள்கிட்ட இருந்து நாம் கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஒவ்வொரு ஹீரோகிட்டயும் சிறப்பான திறமைகள் இருக்கு. அவங்க கூட சேர்ந்து பண்ணும்போது நாமளும் அதைக் கத்துக்குவோம். அது பயிற்சியாகவும் இருக்கு."

    ஹீரோ.. கேரக்டர் ரோல்.. எதுல நடிக்கிறது பிடிக்குது?

    ஹீரோ.. கேரக்டர் ரோல்.. எதுல நடிக்கிறது பிடிக்குது?

    "லீட் ரோல்ங்கிற வட்டத்துக்குள்ள எப்போதுமே நான் ஃபிட் ஆக மாட்டேன். விஷ்வந்த்தா எல்லாமே பண்றான்ங்கிற கான்ஸ்டன்ட் லெவல்ல தான் எப்போதுமே இருப்பேன். வில்லனா இருக்கட்டும்.. அண்ணன் ரோலா இருக்கட்டும்.. முறைமாமனா இருக்கட்டும்.. நண்பன் ரோலா இருக்கட்டும்.. ஆன்ட்டி ஹீரோவா இருக்கட்டும்.. எல்லா கேரக்டரும் பண்ணுவேன். எனக்கு படத்தோட ரோல் பிடிச்சிருந்தா அந்த கேரக்டராவே மாறிடுவேன். ஷூட்டிங் முடியுறவரைக்கும் அந்த கேரக்டர் பெயரோட தான் இருப்பேன். அதுல என்ன முன்னேற்றம் கொண்டுவர முடியும், அதுக்காக என்ன பண்ணனும்னு யோசிப்பேன்."

    அப்போ மெட்ராஸ்காரன்.. இப்போ மதுரைக்காரன் எப்படி இருக்கு?

    அப்போ மெட்ராஸ்காரன்.. இப்போ மதுரைக்காரன் எப்படி இருக்கு?

    "மெட்ராஸ்காரனா நார்த்ல 'அட்டகத்தி', 'கபாலி', 'ஸ்கெட்ச்' படங்கள் மூலமா செயிச்சாச்சு. அடுத்து சவுத்ல 'சண்டக்கோழி 2' படம் மூலமா மதுரைக்காரனா நடிக்கிறேன். விஷால் சாருக்கு சவுத் சைட்ல செம மாஸ் இருக்கு. ஏ, பி, சி மூணு கிளாஸ்லயும் விஷாலுக்கு செம ஃபேன்ஸ் இருக்காங்க. இந்தப் படத்துல மதுரைக்காரனா தமிழ்நாடு முழுக்க எனக்குப் பெயர் கிடைக்கும். எல்லா புகழும் லிங்குசாமி சாருக்கு தான்."

    உங்க கரியர்ல 'கபாலி' படம் எந்தளவுக்கு வளர்ச்சி கொடுத்திருக்கு?

    உங்க கரியர்ல 'கபாலி' படம் எந்தளவுக்கு வளர்ச்சி கொடுத்திருக்கு?

    " 'எஸ்.ஏ.சி சார் 'வெளுத்துக்கட்டு' படத்தில் அறிமுகப்படுத்திய என்னை 'அட்டக்கத்தி' மூலமா சினிமாவுல அடையாளம் தெரிய வெச்சார் ரஞ்சித் அண்ணன். அவர் மூலமா 'கபாலி' ங்கிற ஸ்பெஷல் ஐடி கார்டு கிடைச்சது. 'கபாலி' வழியாக தமிழ் சினிமா ரசிகர்கள் என்னை கவனிச்சாங்க. 'கபாலி' சக்சஸ் மீட்ல தாணு சார், என்னை 'கபாலியின் அடையாளம்'னு கௌரவப் படுத்தினார். தாணு சார் பேனர்ல 'கபாலி', 'ஸ்கெட்ச்' ரெண்டு படம் பண்ணிட்டேன். அவர் ப்ரொடக்‌ஷன்ல அடுத்தடுத்து பண்றேன். வாய்ப்பு கேட்டு நிக்கிற மாதிரி இல்லாம ஒரு படம் பார்த்துட்டு அடுத்த படத்துக்கு நம்மளை கூப்பிட்டு வாய்ப்பு கொடுக்குறாங்க. அந்த அளவுக்கு நல்ல வளர்ச்சி வந்திருக்கு. "

    ஹீரோவா பண்ணின படம் சரியா போகலையே?

    ஹீரோவா பண்ணின படம் சரியா போகலையே?

    " 'ஓநாய்கள் ஜாக்கிரதை' பட்ஜெட் படம் தானே.. பட்ஜெட் படத்துக்கு என்ன ரிசல்ட் கிடைக்குமோ அது கிடைச்சிருக்கு. என்னோட கேரக்டரை குறையில்லாம பண்ணிட்டேன். எப்போதுமே என் வேலையை சரியா பண்ணிட்டு நான் வெளியே வந்துடுவேன். அப்புறம் சக்சஸ் ஆனாலும் சரி, ஆவரேஜா போனாலும் சரி, நான் அதில் ஒண்ணும் பண்ண முடியாது. தயாரிப்பு நிறுவனம் தான் ப்ரொமோஷன் வேலைகளைப் பார்க்கணும். வெற்றிபெற்ற நடிகர்கள் பலர் அவங்க வேலையை பெர்ஃபெக்ட்டா முடிச்சிட்டு எதிலும் தலையிடாமல் போய்க்கிட்டே இருக்காங்க. அந்த விஷயங்களை நானும் கத்துக்கிட்டு இருக்கேன்.

    திரையுலகில் எப்படி பெயர் வாங்கணும்?

    திரையுலகில் எப்படி பெயர் வாங்கணும்?

    "வில்லன் ரோல் கொடுத்தாலும் சரி.. ஹீரோ ரோல் கொடுத்தாலும் சரி.. கேரக்டர் ஆர்டிஸ்ட்டா நடிச்சாலும் சரி மூணு இடத்துலயும் நான் ஒரே மாதிரி தான் நடந்துப்பேன். எல்லா இடத்திலேயும் எப்போதுமே ஒரே மாதிரி தான் பேசுவேன். ஒரே மாதிரி தான் பழகுவேன். விஷ்வந்த் வருவாரு.. அமைதியா நடிச்சுக் கொடுத்துட்டு எந்தச் சிக்கலும் இல்லாம போய்டுவார்னு தான் எல்லோரும் சொல்வாங்க. பொறுமை எனக்கு அதிகம். 'அட்டகத்தி' படத்தில எப்படி நடிச்சேனோ அதே மாதிர் தான் கபாலியிலயும் நடிச்சேன்.. இன்னிக்கு சண்டக்கோழி 2 வரைக்கும் அதே மாதிரி தான் டைரக்டர் சொல்றதை பண்றேன். நம்மை நம்பி பவர்ஃபுல்லான கேரக்டர் கொடுக்குறாங்க. அதுக்கு 200% மெனக்கெட்டுப் பண்ணுவேன்."

    சினிமா உலகில் உங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?

    சினிமா உலகில் உங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட் யார்?

    "இண்டஸ்ட்ரியில் நான் பண்ணின எல்லாப் படத்தின் ஹீரோக்கள் கூடயும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் மெய்ன்டெய்ன் பண்றேன். எல்லோர் கூடயும் நல்ல கான்டாக்ட்ல இருக்கேன். அடுத்தடுத்த படங்களுக்கு நல்ல கெய்டன்ஸ் கொடுக்குறாங்க. உன்னோட ரோல் இதுமட்டும் கிடையாது.. வித்தியாசமான கேரக்டர்ஸ் நிறைய பண்ணுனு சொல்வாங்க. எல்லா கேரக்டருக்குமே நீ பொருத்தமா, யதார்த்தமா செட் ஆவேன்னு மோட்டிவேட் பண்றாங்க. தாணு சார் எனக்கு நிறைய விஷயம் சொல்லிக் கொடுத்திருக்கார். அவங்க சொல்ற எல்லாத்தையும் மைண்ட்ல வச்சுப்பேன்."

    Read more about: interview பேட்டி
    English summary
    Vishwanth acts as an elder brother of Dinesh in 'Attakathi' movie. He attracted fans attention in Rajini's 'Kabali'. Vishwanth is currently playing key role in Vishal's 'Sandakozhi 2'. An exclusive interview with Vishwanth is here ..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X