வடிவேலு என் நண்பர்.. எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை.. விவேக் பேட்டி !

சென்னை : வடிவேலும் நானும் சிறந்த நண்பர்கள் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் நடித்து இருந்தார் . மார்ச் 13 வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன் என் படங்களின் வரிசையில் தாராள பிரபு படம் மிக சிறந்த படமாக அமையும் என்று உறுதியளித்து இருந்தார். அதே போல படம் வெளியாகி ரசிகர்களும் நடிகர் விவேக்கின் கதாபாத்திரத்தை ரசித்து பார்த்தனர் .

 விவேக் டிவீட்

விவேக் டிவீட்

நடிகர் விவேக் கடந்த வருடம் மே மாதம் பெண் குழந்தைகள் விடுமுறைகளில் சமையல் செய்ய கற்று கொள்ளுங்கள் என்று ட்வீட் போட்டிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் இருந்து பெண்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர் . இதற்கு தற்போது விளக்கமளித்து உள்ள விவேக், தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெண்கள் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டார்கள்.

 நண்பேன்டா வடிவேலு

நண்பேன்டா வடிவேலு

இதனால் அவர்கள் அப்படி கோவபட்டது ஒன்றும் தவறில்லை என்று கூறினார். மேலும் வடிவேலு தனது சிறந்த நண்பர் ஒரு முறை கூட எங்களுக்குள் படப்பிடிப்பின் போது சண்டைகள் வந்ததில்லை என்று கூறினார். ஏனெனில் படங்களில் வடிவேலு அதிகமாக கிராமத்து கதாபாத்திரங்களிலும் விவேக் அதிகமாக படித்த இளைஞன் கதாபாத்திரத்தில் ஒன்றாக நடித்ததால் எங்களுக்குள் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை.

 ஜாலியா திட்டினாப்ள

ஜாலியா திட்டினாப்ள

அதே நேரத்தில் வடிவேலு எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் ஜாலியாக திட்டினார் என்றும் அந்த நினைவை பகிர்ந்து இருந்தார். விவேக் மற்றும் வடிவேலு தற்சமயங்களில் ஒரே படங்களில் இணைந்து நடித்தது இல்லை என்றாலும் அவர்கள் ஆரம்ப காலத்தில் இணைந்து செய்த காமெடிகளை யாராலும் மறக்க முடியாது.

 குறைத்து விட்டார்

குறைத்து விட்டார்

வடிவேலு இப்போது சுத்தமாக நடிப்பதை விட்டு விட்டார். அவருக்காக ரசிகர்கள் இன்னும் காத்துக் கிடக்கின்றனர். அதேபோல விவேக் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். கதைகளை தேர்வு செய்துதான் இப்போது நடித்து வருகிறார். விவேக் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாணடாக உருவாகி வரும் இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X