விவேக் சார் அந்த வேலை பார்த்ததால தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு.. மனம் திறந்து பேசிய அருள்செல்வி!
சென்னை: சின்னக் கலைவாணர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் காமெடி நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரொம்பவே ஹெல்த் கான்சியஸாக இருப்பார் என் கணவர் அவருக்கு இப்படியாகும் என கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை என அவரது மனைவி அருள்செல்வி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் படத்திற்கு வசனகர்த்தாவாக முயற்சித்து வந்த நிலையில், அந்த படத்தின் கதாபாத்திரங்களை விவரித்து எழுதி வர பாலசந்தர் சொல்லி 2 நாட்கள் டைம் கொடுத்திருக்கிறார். இரவு முழுவதும் உட்கார்ந்து எழுதி அடுத்த நாள் விடியற் காலையில் பாலசந்தர் வீட்டுக்கு விவேக் சென்றதை பார்த்து அவரே ஷாக் ஆகிவிட்டார்.

அனைத்தையும் படித்துப் பார்த்துவிட்டு இதில் ஒரு கதாபாத்திரத்தில் நீயே நடித்து விடு என சொல்ல, அப்படித்தான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் என் கணவர் என வார்த்தைக்கு வார்த்தை சார் என்று சொல்லியே நடிகர் விவேக்கின் மனைவி பேசியதை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
கல்லூரி மேடம் தான் காரணம்: எனக்கும் மதுரை தான் சொந்த ஊர், விவேக் சாருக்கும் மதுரை தான் சொந்த ஊர். எங்க அப்பா ஏர் ஃபோர்ஸில் வேலை செய்ததால் நான் படித்தது வளர்ந்தது எல்லாமே நார்த் இந்தியாவில். கல்லூரி படிக்கும் போது தான் சென்னைக்கு வந்தேன். அப்போது ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விவேக் சார் வந்திருந்தார். அதன் பின்னர் சில நாட்களுக்குப் பிறகு என்னோட மேடம் ஒரு லெட்டர் கொடுத்து அம்மாவிடம் கொடுக்க சொன்னாங்க. அந்த லெட்டரில் என்னை பெண் கேட்டிருந்தனர். எங்க அம்மாவும் உடனடியாக சம்மதம் தெரிவிக்க அப்படி நடந்தது தான் எங்கள் திருமணம் என்றார்.
கவர்மென்ட் வேலை: சினிமாக்காரனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்கன்னு சொல்வாங்களே உங்க வீட்ல எப்படின்னு கேட்கப்பட்ட கேள்விக்கு நானே அந்த கேள்வியைத்தான் அவரிடமே கேட்டேன். சினிமா என்னோட ஹாபின்னும் செக்ரட்டரியட்ல அரசு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மேலும், சட்டம் படிச்சிருக்கேன்னு சொல்லித்தான் திருமணம் செஞ்சிக்கிட்டார். கவர்மென்ட் உத்தியோகம்னு சொல்லிட்டு திருமணம் செய்துக் கொண்ட அவர், அதன் பின்னர், சினிமா வாய்ப்புகள் அதிகம் வர முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் என்றார்.
ரஜினி சார் வரல: உழைப்பாளி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. ரஜினி சாருக்கு அப்போ உடல்நலம் சரியில்லை என்பதால் தான் அந்த ஷூட்டிங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அவரைத் தவிர ஏகப்பட்ட நடிகர்கள் திருமணத்துக்கு வந்திருந்தனர் என விவேக்கின் மனைவி கூறியுள்ளார்.
வெளியே காட்டமாட்டார்: என்னையும் என் குழந்தைகளையும் எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துக் கொண்டு போகமாட்டார். வீட்டுக்கு வந்துவிட்டால் கணவராகவும், அப்பாவாகவும் தான் எப்போதுமே இருப்பார். சினிமா அவருக்கான பாதை என்றும் அதற்குள் குடும்பம் வர வேண்டாம் என்றும் சொல்லி சொல்லியே குழந்தைகளை வளர்த்தார் என்றும் அவரது மனைவி அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











