தூங்கும் போது கூட மேக்கப்.. எதார்த்தமே இல்ல.. எதுக்கு இவ்வளவு பிரம்மாண்டம்? நடிகை அபிதா!
சென்னை: பாலா இயக்கிய சேது படத்தில் அபிதா குஜலாம்பாள் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து சினிமா பிரியர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் அபிதா. திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில், இப்போது வரும் சீரியலில் எதார்த்தமே இல்லை என கூறியுள்ளார்.
கிரிமனல், ஜன்மம் எக்ஸ், மானசா போன்ற சீரியலில் கல்லூரி மாணவி, தங்கை போன்ற கதாபாத்திரங்களில் ஜெனிலா என்ற பெயரில் நடித்து வந்தார் அபிதா. அதன்பின் சினிமாவில் கோல்மால், வீரபாண்டிய கோட்டை, எட்டுப்பட்டி ராசா போன்ற படத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த இவர். சேது படத்திற்கு பிறகு தான் அனைவரும் கொண்டாடும் நடிகையாக மாறினார். அந்த படத்தில் இருந்து தான் ஜெனிலா அபிதாவாக மாறினார்.

நடிகை அபிதா: அந்த படத்தை தொடர்ந்து சீறிவரும் காளை, உணர்ச்சிகள், அரசாட்சி, நம்நாடு என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த இவர் சீறிவரும் காளை படத்தில் நடித்த போது தான், ராமராஜனுடன் கிசு கிசுவில் சிக்கினார். அதன் பின் சினிமாவில் இருந்து சற்று விலகி அபிதாவிற்கு திருமதி செல்வம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்ததால், அதில் நடித்தார். அந்த சீரியலில் அபிதாவை மேலும் பிரபலமாக்கியது. அந்த சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே, சுனில் என்பரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும், பொன்னூஞ்சல், தங்கமான புருஷன் போன்ற தொடர்களில் நடித்து வந்த அபிதாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின் சீரியலில் இருந்தும் விலகினார்.
மக்கள் மறக்கல: தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே தொடரில் நடித்து வரும் இவர், அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நாங்கள் சீரியலில் நடிக்கும் போதெல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கும். ஹீரோயின்களுக்கு பெரிசா மேக்கப் கூட இருக்காது. ஒரு சின்ன கம்பல், மஞ்சள் கயிறு, கண்ணடி வளையல் என மிகவும் எதார்த்தமாக நடித்தோம். ஆனால், இப்போ வரும் சீரியல்கள் மிகவும் பிரம்மாண்டமா இருக்கும். எப்போ பாத்தாலும் கல்யாணத்திற்கு வர மாதிரி பிரம்மாண்டமா இருக்காங்க, தூங்கும்படி வரும் காட்சியில் கூட மேக்கவோடத்தான் இருக்கிறார்கள். நாங்க எதார்த்தமான நடித்ததால், மக்கள் எங்களை இன்னும் மறக்காக ஞாபகத்தில் வைத்து இருக்கிறார்கள் என பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











