சத்குரு யாருன்னே தெரியாது.. ஈஷா யோகா மையத்துக்கு இதுக்குத்தான் போனேன்.. ஐஸ்வர்யா பளிச் பேட்டி!

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் தியான விழாவுக்கு சினிமா நடிகர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் நாடு முழுவதும் சென்று கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டு நடிகர் சந்தானம், தமன்னா மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பிரபலங்கள் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர். அவர்கள் மனமுருகி தியானம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகின.

Actress Aishwarya says I don t know who is Sadhguru in a recent interview

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஐஸ்வர்யா சத்குரு யார் என்றே தனக்கு தெரியாது என பேசியுள்ளார். மேலும், ஈஷா யோகா மையத்துக்கு ஏன் சென்றீர்கள் என்கிற கேள்விக்கும் அவர் விடை அளித்துள்ளார்.

சாய் பாபா தான் ஃபேவரைட்: சிறு வயதிலேயே என் பாட்டி எனக்கு புத்தரை அறிமுகப்படுத்தி வைத்தனர். அதன் பின்னர் எனக்கு ஆன்மிக குரு என்றால் சாய் பாபா தான். ஆரம்பத்தில் சாய் பாபா கோயிலுக்குத்தான் அடிக்கடி செல்வேன், வாலன்டியராகவும் பணியாற்றுவேன். அடுத்து தான் கால் முட்டியில் அடிபட்டு இருக்கும் போது நண்பர் ஒருவர் ஈஷா யோகா மையத்துக்கு போயிட்டு வரும்படி கூறினார்.

சத்குரு யாருன்னு தெரியாது?: அதுவரைக்கும் எனக்கு சத்குரு யாருன்னே தெரியாது. ஆன்மிக ஞானம் தேடியெல்லாம் நான் அங்கே போகல நண்பர் சொன்னாரே உடம்பில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு, யோகா சிகிச்சை செய்தால் குணமாகும் என்றார்கள். அதை கொஞ்சம் கூட நம்பாமல் தான் அங்கே சென்றேன். ஒன்றுக்கு மூன்று முறை யோகா சிகிச்சை செய்துக் கொண்டேன். ஓரளவுக்கு என்னுடைய உடம்பில் இருந்த பிரச்சனைகளும் குணமாகி விட்டது என்றார்.

மகா சிவராத்திரியில் தமன்னாவே ஆடல: மகா சிவராத்திரி விழாவுக்கு செல்வேன் தியானம் செய்வேன் அது மனசுக்கு அமைதியை தரும். மற்றபடி பெரிய நம்பிக்கையெல்லாம் கிடையாது. நானெல்லாம் டான்ஸ் ஆடவே மாட்டேன். ஏன் காவாலா பாட்டுக்கு நடனமாடிய தமன்னா கூட தான் அங்க போய் டான்ஸ் ஆடல.. யார் யாருக்கு தூக்கம் வராமல் இருக்க என்ன பண்ண முடியுமோ அதை பண்றாங்க என பளிச்சென பேசியுள்ளார்.

பக்தி அதிகம்: சிறு வயதில் இருந்தே ரொம்பவே பக்தி அதிகம் கடவுளை மட்டும் தான் நம்புவேன். கடவுளின் பெயரால் ஊரை ஏமாற்றுபவர்களை பெரிதாக நம்ப மாட்டேன் என்றும் ஐஸ்வர்யா தனது பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில், அவர் அளித்த பேட்டியில் ரோஜா படத்தையும் தளபதி படத்தையும் மிஸ் செய்து விட்டேன் என ரொம்பவே ஃபீல் பண்ணி பேசியிருந்தார். நடிகர் பிரபு மீது அளவுக் கடந்த காதல் இருப்பதாகவும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X