பையா படத்துக்கு அப்புறம் என்னோட படம்தான்... மனம்திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது டிரைவர் ஜமுனா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Recommended Video

முழுக்க முழுக்க CAR ஐ மையப்படுத்திய படம் | Actress Aishwarya Rajesh Exclusive | Filmibeat Tamil

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் தனது படங்கள், காஸ்ட்யூம், தீபாவளி கொண்டாட்டம் உள்ளிட்டவை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது டிரைவர் ஜமுனா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரை மையப்படுத்திய படம்

காரை மையப்படுத்திய படம்

இந்நிலையில் இந்தப் படம் முழுக்க முழுக்க காரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கார்த்தியின் பையா படத்திற்கு பிறகு தன்னுடைய இந்தப் படம் மட்டுமே அத்தகைய கதைக்கருவுடன் வெளியாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கைகொடுத்த டிரைவிங்

கைகொடுத்த டிரைவிங்

முதலில் தனக்கு கார் ஓட்டுவதில் பயம் இருந்ததாகவும் ஆனால் அதை சேலஞ்சாக எடுத்துக் கொண்டு தான் தற்போது சிறப்பாக கார் ஓட்ட பழகியுள்ளதாகவும் அதுவே டிரைவர் ஜமுனா படத்தில் தனக்கு கைகொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கார் டிரைவிங்கில் நாம் பாதுகாப்பாக உணர்வது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடிவேலுவுடன் நடிக்க ஆசை

வடிவேலுவுடன் நடிக்க ஆசை

சிரிப்பு மட்டுமே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்றும் நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளது தனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிப்பதாகவும் அவருடைய காமெடி, உடல் மொழி அனைத்து ரசிகர்களை எப்போதும் சிரிப்புடன் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் தான் அவருடன் நடிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

நம்ம வீட்டு பிள்ளை தனக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தீபாவளியை எப்போதும் தான் மிக சிறப்பாக கொண்டாடி வருவதாகவும் பட்டாசுகள், புத்தாடை, இனிப்புகள், எண்ணெய் குளியல், புதுப் படம் என்று அன்றைய தினம் களைகட்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எளிமையான உடைகள்

எளிமையான உடைகள்

தான் எப்போதுமே எளிமையான உடைகளை தேர்ந்தெடுத்து அணிவதாகவும் அதையே போட்டோஷுட்களிலும் பயன்படுத்துவதாகவும் அதனாலேயே தன்னுடைய போட்டோஷுட்கள் பேசப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தான் 100 ரூபாய்க்கும் டி சர்ட்களை வாங்குவேன் 5,000 ரூபாய்க்கும் உடைகளை தேர்ந்தெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலை நேசிக்க வேண்டும்

நம்முடைய தொழிலை மிகவும் மதித்து செய்தாலே நமக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய டப்பிங்கை தானே செய்வதாகவும் விளம்பர படங்களிலும் டப்பிங்கை தானே மேற்கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X