சிம்பு முதல் விஜயகாந்த் வரை தங்கச்சி... கோடம்பாக்கத்தின் தங்கச்சி அகிலா குஷி!
சென்னை : நடிகை அகிலா சிம்பு , தனுஷ், விஜயகாந்த் உள்ளிட்டவர்களின் தங்கையாக கோலிவுட்டில் நடித்துள்ளார்.
Recommended Video
தற்போது சின்னத்திரையில் அபியும் நானும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் கோலிவுட்டில் தங்கை வேடம் ஏற்று நடித்துள்ள படங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவர் பில்மிபீட்டில் பகிர்ந்துகொண்டார்.

நடிகை அகிலா
நடிகை அகிலா தற்போது சின்னத்திரையில் அபியும் நானும் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் கோலிவுட்டிலும் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அரண்மனை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கோடம்பாக்கத்தின் தங்கச்சி
கோடம்பாக்கத்தின் தங்கச்சி என்றே கூறப்படும் அளவிற்கு பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் அவர் தங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். மிகவும் சிறிய வயதிலேயே நடிகையாக இவர் நடித்துள்ளார். இவரின் இயல்பான நடிப்பு இவருக்கு பல ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சீரியலில் கவனம்
தொடர்ந்து தற்போது சீரியலில் கவனம் செலுத்தி வரும் அகிலா, பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் பில்மிபீட்டிற்காக பேசிய அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அரண்மனை படம்
அரண்மனை படத்தில் இவரது கேரக்டர் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அவர் சினிமாவில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். சீரியலிலும் சாப்டான வில்லி கேரக்டர் ஏற்று அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

தமிழில் ஆர்வம்
அவர் அளித்துள்ள பேட்டியில் தனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, இந்தி என அனைத்து மொழிகளும் தெரியும் என்று தெரிவித்துள்ளார். தான் மலையாளி என்றாலும் மற்றவர்கள் பேசுவதை பார்த்து தமிழை சரளமாக பேச கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இசையிலும் சிறப்பான ஆர்வம்
மிகவும் சிறிய வயதிலேயே தமிழ் தனக்கு பரிச்சயமான தாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார். மேலும் அகிலாவிற்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது.

இளையராஜா பாடல்
அவர் சிறப்பாக பாட்டு பாடுகிறார். மேலும் இசைக் கருவிகளையும் வாசிக்கும் திறமை அவருக்கு காணப்படுகிறது. ரசிகர்களுக்காக அவர் இளையராஜாவின் ஒரு பாடலையும் பாடிக் காட்டினார்.

எளிமையான அகிலா
சுசீந்திரன், சுந்தர் சி, பேரரசு உள்ளிட்ட மிகப் பெரிய இயக்குனர்களின் கீழ் பணிபுரிந்துள்ள அகிலா மிகவும் எளிமையாக காணப்படுகிறார். தனக்கு அடுத்தடுத்த விஷயங்களை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் என்று அவர் கூறியுள்ளார்.
கணவரின் ஒத்துழைப்பு
தன்னுடைய கணவர் தன்னுடைய கேரியரில் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்கள் ஒத்துழைப்பு நமக்கு இருக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











