Ambika: இந்த நடிகருடன் காதல்.. என்ன பத்தி அசிங்கமா பேசுறாங்க.. விளாசிய அம்பிகா!

சென்னை: 80ஸ் கால கட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை அம்பிகா. ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், மோகன் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது வரை, சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வரும் அம்பிகா, கலாட்டா தமிழ் youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் நானும், ராதாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் இதுவரையில் எனக்கும் அவளுக்கும் சண்டை வந்ததே இல்லை. ஆனால், எனக்கு நடிப்பின் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் என்பதால், ஷூட்டிங் என்றால் அதிகாலையிலேயே எழுந்து அதற்காக தயாராகி விடுவேன். கமல்ஹாசன், ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு கூட காட்ஃபாதர் என்று ஒருவர் இருக்கிறார். ஆனால், எனக்கு அப்படி யாரும் இல்லை. என்னை பார்த்து தான் ராதா சினிமாவுக்கு வந்தார்.

ambika radha interview
Photo Credit:

நடிகை வனிதா: தொடர்ந்து பேசிய அம்பிகா, மலையாள படம் ஒன்றில் நான் நடித்து கொண்டிருந்த போது அதில், நடித்த ஒரு நடிகருடன் சேர்த்து வைத்து கிசுகிசு வந்தது. அந்த, கிசுகிசுவை படித்துவிட்டு மிகவும் அழுதேன். அதன் பிறகு சூட்டிங் ஸ்பாட்டில் பிரேம் நசீர், சார் என்ன பிரச்சனை என்று கேட்டார். அப்போது, நான் என்னை பற்றி இப்படி எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லி அழுதேன். இப்படி வந்தால் நீ பிரபலமாகி கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம், நல்லதாக வந்தாலும் சரி, கெட்டதாக வந்தாலும் சரி அதை கண்டு கொள்ளவே கூடாது என்றார். அதன் பிறகு நான் எதைப்பற்றியும் கண்டு கொள்வதே இல்லை.

மோசமான வார்த்தைகள்: ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒருவரை பற்றி பேசும்போது ஆபாசமாகவும், அசிங்கமாகவும், அருவருப்பான வார்த்தைகளாலும் விமர்சனம் செய்கிறார்கள். குறிப்பாக இப்போது மீடியாக்களில், என்னை பற்றி பேசுவதற்கு என்றே நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்கள், என்னைப் பற்றி ரொம்ப அழகாக அசிங்கமாக பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் தயவு செய்து என்னைப்பற்றி இதே போல அசிங்கமாகவே பேசுங்கள். ஏனென்றால், அப்போதுதான் என்னைப் பற்றி பலருக்கும் தெரியும். என்னைப் பற்றி அவதூறாக செய்தி கிசுகிசு எழுதுபவர்கள் மீது எனக்கு கடுமையாக ஆத்திரம் வரும். அவர்களை அப்படியே அடித்து விடலாம் என்று கூட நான் நினைத்து இருக்கிறேன். ஆனால் என்னால் தான் அவர்களுக்கு பிழைப்பு ஓடுகிறது. இந்த பணத்தில் தான் சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்ததும் மன்னித்துவிட்டேன் என்றார்.

மன வருத்தம்: பலரும் என்னை பார்க்கும் போது, எப்படி இருந்த நீங்க, இப்படி ஆகிட்டீங்களே என்று பேசுவதை கேட்கும் போது கோவமாகத்தான் வரும். ஒரு கதாநாயகிக்கு திருமணமாகி குழந்தை பிறந்து விட்டது என்றால், அவளுக்கு இருபதே வயதே இருந்தாலும் 70 வயது என போட்டு பெரிய செய்தி ஆக்கி விடுவார்கள். ஆனால், ஹீரோக்கள் மட்டும் தொடர்ந்து 17 வயது ஹீரோயினுடன் ஜோடி போட்டு நடிப்பார்கள். இது பார்க்கும்போது மனசு வேதனையாக இருக்கும். இந்த துறை ஆண்களுக்கான துறையில் என்பதால், இந்த விஷயத்தில் எந்த நடிகையாக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது. இந்த வேதனையும் வலியையும் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்று நடிகை அம்பிகா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X