கத்தரி பூவழகி கரையா பொட்டழகி - அம்மு அபிராமி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
Recommended Video
சென்னை: அசுரன் படத்தில் நான் நடிப்பதற்கு முழு முதல் காரணம் தயாரிப்பாளர் தாணு சார் தான் . அவர் தான் என்னை வெற்றிமாறனிடம் சிபாரிசு செய்தார், என்று அசுரன் படத்தில் நடித்தது பற்றி தன்னுடைய அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார் நடிகை அம்மு அபிராமி.
இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அந்த படத்தில் அம்மு அபிராமியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்த படத்திற்கு பின்பு கலைப்புலி தாணு தயாரிக்கும் துப்பாக்கி முனை படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போதே, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
தனுஷ் சார் கிட்டே, ஒரு ஆக்டர்ங்கிறதை தாண்டி எல்லாத்தையும் நம்ம கத்துக்கிடணும்கிறதை தெரிஞ்சிகிட்டேன். ஒரு கேமரா ஆங்கிள்ல இருந்து எங்க லைட் இருக்கும்குறதை பத்தி தெரிஞ்சிகிட்ட பயங்கரமான ஒரு சென்சிபிள் பெர்சன்.
அதனால் அவர் கூட ஒர்க் பண்றதுங்குறது such an amazing experience. அதே மாதிரி நம்ம நல்லா ஒர்க் பண்ணினா தட்டி கொடுப்பாரு. அசுரன் படத்துல நான் ஒரு சீன்ல நல்லா நடிச்சதுக்கு தோள்ல தட்டிகொடுத்து நல்லா நடிச்சிருக்கேன்னு தட்டிக் கொடுத்தாரு.
நான் இந்த இடத்துல நம்ம தாணு சார்க்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சொல்லிக்கிறேன். இங்க மட்டுமில்லாம, எல்லா பேட்டியிலேயும் நான் இதை சலிக்காம சொல்லிகிட்டுருக்கேன். நான் அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். என்னை அவரோட பொண்ணு மாதிரி பாத்துப்பாரு. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.
நான் அவர் தயாரிச்ச துப்பாக்கி முனை அப்படிங்குற படத்துல நடிச்சேன். அப்பவே அவரு என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு. நீ நல்லா நடிக்கிறேன்னு பாராட்டுவாரு. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். தாணு சார் தான் வெற்றிமாறன் கிட்ட என்னை பத்தி சொல்லி, இந்த கேரக்டருக்கு பொருத்தமா இருக்கும்னு ரெகமண்ட் பண்ணினாரு.
வெற்றிமாறன் சாரும், துப்பாக்கி முனை படத்துல நான் நடிச்ச பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும் நீ, பாட்டை பாத்துட்டு, லுக் டெஸ்ட் பாத்துட்டு ஒகே, இந்த பொண்ணு இந்த கேரக்டருக்கு பொருத்தமா இருக்கும்னு செலக்ட் பண்ணினாரு. இப்படித் தான் அசுரன் படத்துல நடிக்குறதுக்கு எனக்கு சான்ஸ் கிடைச்சது.

அசுரன் படம் வெளியானதுக்கு அப்புறமா எனக்கு நல்ல நல்ல கதைகள் வரும்னு நான் நினைக்கிறேன். நல்ல கதைகளை மட்டுமே நான் செலக்ட் பண்ணி நடிப்பேன். அதனால் அதுக்கேத்த மாதிரி நீங்க என்னை ஒரு நல்ல டைமென்சன்ல (Dimention) பாப்பீங்க.
அடுத்ததா, மணிபாரதி சார் டைரக்ஷன்ல இன்னும் டைட்டில் வைக்காத புது நடிகர்கள் நடிக்குற படத்துல நான் நடிச்சிக்கிட்டு இருக்கேன். இது தவிர நான் எந்த புது படத்துக்கும் சைன் பண்ணலை. அசுரன் படம் ரிலீஸ் ஆனதுக்கு பின்னாடி டெஸிசன் எடுத்துக்கிடலாம்னு முடிவெடுத்திருக்கேன். அதனால வெய்ட்டிங் ஃபார் அசுரன் ரிலீஸ்.

கத்தரி பூவழகி கரையா பொட்டழகி பாட்டை பொறுத்த வரைக்கும், எனக்கு சூட்டிங் முழுக்க சென்னையில செட்ல தான் எடுத்தாங்க. இதுக்கு சதீஷ் மாஸ்டர் தான் கோரியோகிராஃப் பண்ணினார். அவருக்கு ரொம்ப தேங்க்ஸ். ஏன்னா நான் பண்ணின அலப்பறை எல்லாத்தையும் தாங்கிகிட்டு, என்னை டான்ஸ் ஆட வச்சிட்டாரு. தனுஷ் சார் பாட்டுக்கு நான் டான்ஸ் ஆடுனதுங்குறது என்னால மறக்க முடியாத அனுபவம் என்றார் அம்மு அபிராமி.


Click it and Unblock the Notifications











