அவருக்கு பொறுமையே இல்ல.. வந்ததும் CM ஆகணும்னு ஆசைப்படக்கூடாது.. ரோஜா பேட்டி!
சென்னை: சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளராக செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து லெனின் பாண்டியன் திரைப்படத்தி தயாரித்துள்ளனர். இப்படத்தை, டிடி பாலசந்திரன் இயக்க, நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை ரோஜா, தர்ஷன் கணேஷ், ஷ்ரீதா ராப், ஆடுகளும் நரேன், கங்கை அமரன் ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை ரோஜா, லெனின் பாண்டியன் திரைப்படத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் முதல் திரைப்படமான செம்பருத்தி திரைப்படத்தில் நடித்த போது எப்படி ஒரு உணர்வு இருந்ததோ, அதேபோல உணர்வு தான் இப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் அரசியலுக்கு சென்று விட்டதால் சினிமாவில் பெரும்பாலும் நடிக்கப்படவில்லை. ஆனால். தொலைக்காட்சியில், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் நடிப்பதில் டேட் பிரச்சனை எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக சினிமாவை தவிர்த்து வந்தேன்.

இந்த திரைப்படத்தில் நீங்கள் நடித்தால், நன்றாக இருக்கும் என்று சுப்பு என்னிடம் சொன்னார். நான் சினிமாவில் நடிப்பது இல்லை என்றேன். ஆனால், அவர் ஒரு முறை கதை கேளுங்கள் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும் என சொன்னார். அதன் பிறகு கதை கேட்டேன், கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது, மனதை தொடும் வகையில் இருந்ததால், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நான் ஒப்புக்கொண்டேன் என்றார்.
நடிகை ரோஜா: இதையடுத்து, செய்தியாளர்கள், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும், சிரஞ்சிவி கட்சியை கலைத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை ரோஜா, சிரஞ்சீவி அரசியல் கட்சியை தொடங்கிய போது முதலில் நான் தான் குரல் கொடுத்தேன். அப்போது யாரும் என் பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை. ஏனென்றால் சிரஞ்சீவி முகவும் மிகவும் சென்சிடிவ்வான ஆளு, அவரால் இறங்கி வேலை செய்வது என்பது எல்லாம் கடினம். அரசியலில் எப்பொழுதுமே தினம் தினமும் சுயமாக நாம் முடிவு எடுக்க வேண்டும். மற்றவர்களை டிபன் செய்து நாம் இருக்கக் கூடாது. ஆனால், சிரஞ்சீவி மற்றவர்களை நம்பி இருந்தார். அப்படி இருந்ததால் தான் அவரால் கட்சியை சரியாக கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது.
பொறுமை வேண்டும்: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்டிஆர் போல சிரஞ்சீவி மீது மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்து இருந்தார்கள். அவர் பொறுமையாக இருந்திருந்தால் நிச்சயமாக அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும். ஆனால் அவரிடம் பொறுமை இல்லை. வந்ததுமே சிஎம் ஆகி விட வேண்டும் என நினைத்தால், சினிமாவில் வேண்டுமென்றால் நடக்கலாம், நிஜ வாழ்க்கையில் அது நடக்காது. ஆனால், நடிகர் விஜய் அப்படி இல்லை இரண்டு மூன்று வருடமாகவே அரசியலை நோக்கித்தான் அவரின் நகர்வுகள் இருக்கிறது. அரசியலில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது. மக்கள் அவருக்கு எந்த இடத்தை கொடுக்கிறார்கள் என்பதை தேர்தல் தான் முடிவு செய்யும். ஏன்னென்றால் அரசியலில், ஜாதி, பணம், பவர் ஆனால் அனைத்துமே இருக்கும். தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு இருக்கும் அரசியல் சூழல்தான் தேர்தல் முடிவை முடிவு செய்யும். மக்களை யார் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும், அப்படி மக்கள் மனதில் யார் இடம் பிடிக்கிறார்களோஅவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும் என்று ரோஜா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











