twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பேரன்பு' நாயகி நடிகை அஞ்சலி அமீர்... பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முதல் திருநங்கை!.

    |

    Recommended Video

    தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை ஹீரோயின் அஞ்சலி அமீர்!- வீடியோ

    சென்னை: இயக்குநர் ராமின் பேரன்பு படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் திருநங்கை அஞ்சலி அமீர்.

    கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படத்தை தொடர்ந்து ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. பல்வேறு படவிழாக்களில் திரையிடப்பட்டு வாழ்த்துக்களைப் பெற்று வரும் இப்படத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா, இயக்குநர் அமீர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    கொடைக்கானலை பின்னணியாக கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் திருநங்கை அஞ்சலி அமீர் நடித்துள்ளார். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நடிகர் மம்முட்டிதான், திருநங்கை அஞ்சலி அமீரை இயக்குனர் ராமிடம் பரிந்துரை செய்துள்ளார்

    இந்நிலையில், தமிழில் நாயகியாக அறிமுகம் ஆவது குறித்து அஞ்சலி அமீரிடம் பேசினோம். இதோ ஒன் இந்தியாவிற்கு அவர் அளித்த பிரத்யேகப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

    பேரன்பு வாய்ப்பு எப்படி வந்தது?

    பேரன்பு வாய்ப்பு எப்படி வந்தது?

    நான் மாடலிங் செய்துகொண்டிருந்தேன். கேரளாவில் டிவி நிகழ்ச்சிகளும் செய்துகொண்டிருந்தேன். ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்த நடிகர் மம்மூட்டி, இயக்குனர் ராமிடம் என்னை பரிந்துரைத்தார். அதன் பிறகு என்னை சென்னை அழைத்து, ஆடிசன் வைத்தார். பின்னர் போட்டோ செஷன் நடந்தது. பிறகு இயக்குனர் ஒகே சொல்லிவிட்டார்.

    பேரன்பு படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...

    பேரன்பு படத்தில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...

    படம் ஆரம்பிக்கும் முன்னர் ராம் சார் வீட்டில் 15 நாட்கள் தங்கியிருந்து ஓரியன்டேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். மம்மூட்டி சார் மிகவும் கோவப்படுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் முதல் நாளில் இருந்து எனக்கு டென்ஷனாகவும், பயமாகவும் இருந்தது. கடைசி ஷெட்யுல் படப்பிடிப்பில் தான் அது நீங்கியது. மம்மூட்டி சாரும், ராம் சாரும் தான் எனக்கு நடிக்க கற்றுத்தந்தனர். ராம் சார் தான் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். இந்த படத்திற்கு வருவதற்கு முன்னர் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் இப்போது ஓரளவுக்கு பேசுகிறேன்.

    பேரன்பு படம் உலக சினிமா விழாக்களில் பாராட்டப்பட்டு வருகிறதே...

    பேரன்பு படம் உலக சினிமா விழாக்களில் பாராட்டப்பட்டு வருகிறதே...

    உண்மையிலேயே எனக்கு இது பெருமையான விஷயம். ரோட்டர்டாம் விழாவில் படம் பார்த்து விட்டு அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். அதேபோல ஷாங்காய் விழாவிலும் படத்துக்கு பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. பேரன்பின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதுவும் மம்மூட்டி சாரின் இணையாக, ராம் சார் இயக்கத்தில் நடித்தது எனது அதிர்ஷ்டம்.

    என்னென்ன படங்களில் நடித்துள்ளீர்கள்? தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பீர்களா?

    என்னென்ன படங்களில் நடித்துள்ளீர்கள்? தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பீர்களா?

    மோகன் லால் சாருடன் நடித்த ஸ்வர்னபுருஷன் மலையாள படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். ஒரு கன்னட பட வாய்ப்பும் வந்துள்ளது. தொடர்ந்து தமிழில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். இரண்டு பட வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் பேரன்பு ரிலீஸ் ஆன பிறகு ஒப்புக்கொள்ளலாம் என தவிர்த்துவிட்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழில் நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன். நல்ல நடிகை என பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

     தமிழில் எந்தெந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்பது உங்கள் ஆசை?

    தமிழில் எந்தெந்த நடிகருடன் நடிக்க வேண்டும் என்பது உங்கள் ஆசை?

    எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். குறிப்பிட்டு யாரையும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், அஜித், சூர்யா, விஷால் ஆகியோரை எனக்கு ரொம்பப்பிடிக்கும். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறேன்.

    உங்கள் குடும்பத்தினர் உங்களை எப்படி அணுகுகிறார்கள்?

    உங்கள் குடும்பத்தினர் உங்களை எப்படி அணுகுகிறார்கள்?

    என்னுடைய சிறு வயதிலேயே என் அம்மா இறந்துவிட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்பு அப்பாவும் இறந்துவிட்டார். இப்போது சித்தியுடனும், இரண்டு தம்பிகளுடனும் தான் வசிக்கிறேன். கோலிக்கோடு தான் பிறந்த ஊர். என் குடும்பத்தாருக்கு என்னால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த சமுதாயத்தைப் பற்றி தான் அவர்களுக்கும் பயம். அக்கம்பக்கத்து வீட்டார் தான் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் கேரளாவில் தற்போது நிலைமை மாறி வருகிறது. கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை இருப்பதால், தங்கள் பிள்ளைகளை திருநங்கை என வெளிப்படையாக சொல்ல, பெற்றோருக்கு இருந்த தயக்கம் குறைந்திருக்கிறது.

    உங்கள் உண்மையான பெயர் என்ன?

    உங்கள் உண்மையான பெயர் என்ன?

    அதை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. அந்த மனிதர் இப்போது இல்லை. இப்போது நான் அஞ்சலி அமீர்....

    English summary
    In an exclusive interview to oneindia, actress Anjali Ameer shared her experience in working with Mamooty and director Ram in Peranbu movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X