விஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரலை…. ஆத்மியா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Recommended Video

விஜய் சேதுபதி கொடுத்த முத்தம் | ACTRESS ATHMEEYA | KAAVIYYAN MOVIE | FILMIBEAT TAMIL

சென்னை: நான் படிச்சிக்கிட்டு இருக்கும்போதே மனம் கொத்தி பறவை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனால் அந்த படத்தில் நடிச்சி முடிச்சேன். பின்பு படிப்பை முடிச்ச பிறகு, ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். சமீபத்தில் விஜய் சேதுபதியோட மார்கோனி மத்தாய் படத்தில நடிச்சிருக்கேன். அந்த படத்தில நடிக்கும்போது எல்லாருக்கும் முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி எனக்கு முத்தம் தரவில்லை என்று மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் நம் மனங்களை கொத்திச் சென்ற ஆத்மியா தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் மனம் கொத்தி பறவை படம் நடிச்சிக்கிட்டு இருக்கும்போதே, இன்னொரு மலையாளப் படம் கூட நடிச்சிருக்கேன். அதுக்கப்புறமா கொஞ்சம் கேப் எடுத்துக்கிட்டு 2015ஆம் ஆண்டில் திரும்பவும் ஒரு மலையாள படத்தில நடிச்சேன். அதுக்கப்புறமா தான் நான் நடிக்கணும்கிற முடிவுக்கே வந்தேன். அது வரைக்கும் நடிக்கணும்கிற எண்ணமே எனக்கு கிடையாது.

Actress Athmiya Exclusive Interview

ஆனால், அதுக்குள்ளேயே, சினிமா இண்டஸ்ட்ரீயே சுத்தமா மாறிடிச்சி. காண்டாக்ட் மாறிடிச்சி. அதனால் ஒரு நல்ல வாய்ப்புக்காக நான் காத்திக்கிட்டு இருந்தேன்னு சொல்லலாம். மனம் கொத்தி பறவை படம் நடிச்சிக்கிட்டு இருக்கும்போதே, நிறைய வாய்ப்புகள் வந்திச்சி. அதையெல்லாம் நான் யுட்டிலைஸ் பண்ணிக்கவே இல்லை.

அந்த படத்துக்கு அப்புறமா, 2014ல், போங்கடி நீங்களும் உங்க காதலும்னு ஒரு படம் நடிச்சேன். அது ரிலீசாயிடிச்சி. அதுக்கப்புறமா மலையாளத்துல ஒரு படம் பண்ணினேன். ரொம்ப கேப்புக்கு அப்புறமா இந்த காவியன் படத்துல நடிச்சிருக்கேன்.

காவியன் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது. ஏன்னா, இந்த படத்துல நடிச்ச ஷாம், ஏற்கனவே சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா, தமன்னா கூட நடிச்சவரு, என்கூட நடிக்கப்போறாருங்கிறதே எனக்கு பயமா இருந்தது. நான் பார்த்த படத்துல எல்லாம் ஷாம் ரொம்ப ரஃப்பா இருந்தாரு. ஆனால், நான் நேரடியா பாக்கும்போது தான், அவரு ரொம்ப கூலான மனிதர்னு. ரொம்ப கம்ஃபர்ட்பிளான நடிகர் அவரு. ஷாம் ரொம்ப ஹானஸ்டியான, வெளிப்படையான மனிதர்.

காவியன் படத்தில், ஸ்ரீதேன்னு இன்னொரு நடிகையும் இருக்காங்க. அவங்க தான் ஷாமுக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. ரொமான்ஸ் எல்லாம் பண்ணியிருக்காங்க. எனக்கு ரொமான்ஸ் சீன் எதுவும் கிடையாது. இந்தப் படத்தில என்னோட கேரக்டர் பேரு மாதங்கி. மாதங்கி ஒரு ஸ்ரீலங்கன் ரெஃப்யூஜி (இலங்கை அகதி) இந்தப் படத்தில. இது ஒரு த்ரில்லர் சப்ஜெக்ட் படம்.

காவியன் படம் முழுக்க அமெரிக்காவுல லாஸ் வேகாஸ்ல சூட் பண்ணியிருக்கோம். இது ஒரு சைக்கோ த்ரில்லர் சப்ஜெக்ட் மூவி. இதுக்கு மேல இந்த படத்தை பத்தி சொல்லக்கூடாது. ஆனா நிறைய ஆக்சுன் சீக்வென்ஸ் எல்லாம் இதுல இருக்கு. ரசிக்கிற மாதிரி இருக்கும். பொதுவா நான் ஆக்சன் படங்களை பார்க்க மாட்டேன். ஒரே டென்சனா இருக்கும். ஆனா இந்த படத்தில ஆக்சன் சீன்களை ரொம்ப ரசிச்சி பாத்தேன்.

எனக்கு நயன்தாரா மேடத்தை ரொம்ப பிடிக்கும். ஏன்னா இந்த அளவுக்கு சவுத் இந்தியா முழுக்க ஒரு ஸ்டாரா பேர் எடுத்திருக்காங்க. அதனால அவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி கீர்த்தி சுரேஷ். அவங்க மகாநடி படத்தில நடிச்சதுக்கு பின்னாட ரொம்ப பிடிக்கும். ஐ லவ் ஹெர். லைட்டா பொறாமையா கூட இருக்கு.

காவியன் படத்துக்கு பின்னாடி, இப்போ டைரக்டர் சமுத்திரக்கனி சார் கூட வெள்ளை யானை படத்துல நடிச்சிக்கிட்டிருக்கேன். வெள்ளை யானை படத்துக்கு அப்புறமா, மலையாளத்துல ஜோசப்னு ஒரு மூவி பண்ணியிருக்கேன். அந்த படம் நல்லா ஓடிச்சி.

அந்த படத்துக்கு பின்னாடி மார்கோனி மத்தாய் படத்துல விஜய் சேதுபதி கூட நடிச்சிருக்கேன். இதுல ஜெயராம் சாரும் நடிச்சிருக்கார். விஜய் சேதுபதி சார் மலையாளத்துல நடிக்க வரும்போது, எனக்கு மட்டுமில்ல அவரோட ஃபாலோயர்ஸ் எல்லாருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருந்திச்சி. விஜய் சேதுபதி சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

விஜய் சேதுபதி எங்க எல்லார் கூடயும் நல்லா பேசி பழகினாரு. எல்லாருக்கும் முத்தம் கொடுத்தாரு. ஆனா எனக்கு முத்தம் கொடுக்கலை. அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட் சாதாரணமா எல்லார் கூடவும் பழகுனது, ஆச்சரியமா இருந்தது. அந்த வீடியோவை பாக்கும்போது, இந்த எல்லாம் உண்மையா இருக்குமான்னு எனக்கு தோணிச்சி என்று வியந்தார் ஆத்மியா.

More from Filmibeat

Read more about: athmiya interview shaam ஷாம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X