Don't Miss!
- News
போலி செய்தி பரப்பினால்.. அது யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம்.. மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தோழிகளோடு சேர்ந்து.. முதல் முறையாக "அதை"ப் பார்த்தபோது.. வெட்கப்பட்ட அதுல்யா!
சென்னை : கோலி குண்டு கண்ணழகியான அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
நாடோடி 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாலி, வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது, சாந்தனு பாக்கியராஜூன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

எடுபடவில்லை
காதல் கண்கட்டுதே இவர் அறிமுகமான திரைப்படமாகும் இந்த படம் பெயர் சொல்லும் அளவுக்கு ஓட வில்லை. இருப்பினும் விடாது பல முயற்சிகளை செய்து வரும் அதுல்யா, கிடைக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்தி கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து வருகிறார்.

ரசிகர்கள் குஷி
எந்தப்படமும் பெயர் சொல்லும் அளவுக்கு அமையவில்லையே என்ற கவலை இருந்தாலும், ரசிகர்களை தன் வசப்படுத்தும் யுக்தியை தெரிந்து வைத்துள்ள அதுல்யா, இணையத்தில்படு ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை பெற்று வருகிறார்.

அதிக ரசிகர்கள்
இவர் எந்த புகைப்படத்தை பகிர்ந்தாலும் அதற்கு விடாது லைக்குகளை போட்டு,அவரை குஷிப்படுத்தி விடுகின்றனர் ரசிகர்கள். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 13 லட்சத்திற்கும் மேல் பாலோவர்கள் இருக்கிறார்கள். மேலும் ட்விட்டரில் 2 லட்சத்திற்கும் மேல் பாலோவர்கள் இருக்கிறார்கள்.

பிட்டு படம்
அதுல்யா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் , வாயை கொடுத்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். அந்த நேர்காணலில், தொகுப்பாளர் நீங்கள் முதன் முதலில் பார்த்த பிட்டு படம் என்னா என்று கேள்வி கேட்க? அது பிட்டுப்படமானு தெரியாது ஆனால், நானும் என் கல்லூரி நண்பர்களும் வகுப்பறையில் ஆஷிக் பானா என்ற இந்தி பாடலை பார்த்து இருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.

த்ரில்லாக இருந்தது
அந்த பாடலில் செம ரொமான்டிக் சீன்கள் இருந்தன, வகுப்பறையில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து பார்த்தது உண்மையில் த்ரில்லாக இருந்தது. இதை எப்படியோ என் ஆண் நண்பர்கள் கண்டுபிடித்து விட்டு செமயா எங்களை கிண்டலடித்தார் என்று கூறினார்.இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் என்னது பிட்டுபடமா என வாய் பிளந்துள்ளனர்.