Bhavana: மோசமா மிரட்டுவானுங்க.. எல்லாத்தையும் தாண்டிதான் நீதிக்காக போராடனும்.. பாவனா ஷேரிங்ஸ்!

கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மலையாள நடிகை பாவனா நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். அவர் இன்று பெண்களுக்கு ஒரு முன்மாதிரியான பலமான பெண்ணாகத் திகழ்கிறார். கேரள மக்கள் முழுமையாக அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

சமீபத்திய பத்திரிகை நேர்காணலில், கடந்த எட்டு ஆண்டு சட்டப் போராட்டம், அந்தக் காலங்களில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அவரது அனுபவத்தில் பெற்ற புரிதல்கள் குறித்து பாவனா மனம் திறந்து பேசினார். "நீதி கிடைக்குமா தெரியவில்லை, ஆனால் போராடுவதே எனது முடிவு" என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். இந்த நேர்காணலின் சில முக்கியப் பகுதிகள், சிறிய வீடியோ ரீல்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகின. எனினும், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அந்த கிளிப்களை ஆபாசமான கருத்துகளாலும், கடுமையாக விமர்சனங்களாலும் கமெண்ட் செக்‌ஷனை நிரப்பி வருகிறார்கள்.

பாவனாவின் நேர்காணலுக்கு வந்த இந்த எதிர்மறை கருத்துகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்த ஒரு பதிவு தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. அந்தப் பதிவின்படி, நடிகையின் நேர்காணலுக்கு வந்த விமர்சனங்கள் 'பயமுறுத்துவதாக', "உண்மையில் பயமாக இருக்கிறது..." என்று அப்பதிவு தொடங்கியது.

Actress Bhavana Opens About How She Faced Worst Comments on Social

பாவனா தனது நேர்காணலில், "ஒரு பெண்ணுக்கு நீதி, அனுதாபத்தின் மூலமா அல்லது போராட்டத்தின் மூலமா?" என்ற கேள்விக்கு, பாவனா பதிலளித்தார்: "என்னால் முடிந்ததை நான் செய்தேன். இவ்வளவுதான் முடிந்தது. நான் சூப்பர்மேன் இல்லை. ஒரு இந்தியக் குடிமகளாக முடிந்த அனைத்தையும் நான் செய்தேன். மேலும் தான் எடுத்த முடிவு சரி என்றும் அவர் தெரிவிதார்.

பாவனா ஷேரிங்ஸ்: மேலும் பாவனா தான் எதிர் கொண்ட மோசமான விமர்சனங்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. “ஒரு வழக்கின் காரணமாக, மதிப்புமிக்க ஆண்டுகளையும், தொழிலையும், மன அமைதியையும் இழந்த ஒருவரின் மீது, அத்தனை ஆண்டுகள் போராடிய ஒருவருக்கு எதிராக இவ்வளவு அருவருக்கத்தக்க கருத்துகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதரவான கருத்துகள் மகிழ்ச்சி அளித்தாலும், இந்த எதிர்மறை விமர்சனங்கள் என்னைப் பயமுறுத்துகின்றன" என்று பாவனா தெரிவித்திருந்தார். "உண்மையிலேயே பயமாக இருக்கிறது. நாளை இதே நிலையில் ஒரு சாதாரணப் பெண் வந்தால், இதைவிடக் கடுமையான கருத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது."

Actress Bhavana Opens About How She Faced Worst Comments on Social

போராட்டம்: "இந்தச் சமூகத்தால் ஒரு பெண் தன் இருப்புக்காகப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதையோ, சகிப்புத் தன்மையுடன் இருப்பதையோ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அவள் வாழ்நாள் முழுவதும் அழுதுகொண்டிருக்க வேண்டும், மௌனமாக இருக்க வேண்டும், அல்லது பொய் என்று முத்திரை குத்தப்பட வேண்டும். உண்மை என்னவென்றால், இந்த விமர்சனங்கள் பாவனா என்ற தனிப்பட்ட ஒருவரை மட்டும் இலக்கு வைத்து அல்ல. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் அனுப்பப்படும் ஒரு எச்சரிக்கை: "நாளை நீயும் இதுபோல முன்வந்தால், உனக்கும் இதுதான் கதி" என்ற மறைமுக எச்சரிக்கை அது. ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்குமா?" என்பதனை விடவும், "நீதியைக் கேட்கும் ஒரு பெண்ணை இந்தச் சமூகம் அமைதியாக வாழவிடுமா, இல்லையா?" என்ற கேள்வியே மிகவும் பொருத்தமானது என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X