Fire: கல்யாணம் ஆன அடுத்த நாளே.. ஃபயர் பட நடிகையின் பிரத்யேக பேட்டி!

சென்னை: நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சாந்தினி தமிழரசன். இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கு கிடைக்கும் படங்களை சரியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். வரும் பிப்ரவரி 14ம் தேதி இவர் நடித்துள்ள ஃபயர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள இந்த படத்தை ஜே.எஸ்.கே இயக்கியுள்ளார். சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

chandini tamilarasan fire movie

நாகர்கோயிலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ள நிலையில், அந்த படத்தில் நடித்துள்ள நடிகை சாந்தினி தமிழரசன் பிலிமிபீட் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க.

நடிகை சாந்தினி தமிழரசன்: முட்டக் கண்ணு முழியழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் சாந்தினி. சித்து +2 படத்தில் நடிக்க ஆரம்பித்த அவர், நான் ராஜாவாகப் போகிறேன், வில் அம்பு, கவண், மன்னர் வகையறா, வண்டி, காதல் முன்னேற்றக் கழகம், எட்டுத்திக்கும் பற, கசட தபற, அன்புள்ள கில்லி, குடிமகன், பொம்மை மற்றும் சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். தனது பிரத்யேக பேட்டியில் திருமணத்துக்குப் பிறகு தான் எப்படி நடிக்கிறேன் என்றும் இரண்டு வாழ்க்கையையும் எப்படி பேலன்ஸ் செய்கிறேன் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கூறியுள்ளார்.

chandini tamilarasan fire movie

பிக் பாஸ் பாலாவை பற்றி தப்பா நினைச்சிட்டேன்: பிக் பாஸ் சீசன் 4ல் ரன்னர் அப்பான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். அந்த ஷோவிலேயே அவர் ஆரியுடன் எதிர்த்து சண்டை போட்டு வந்ததை எல்லாம் பார்த்துவிட்டு அவர் ரொம்பவே டெரரான ஆள் என நினைத்தேன். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசுவதையும் பழகுவதையும் பார்த்து ரொம்பவே தப்பா நினைச்சிட்டேன் என ஃபீல் பண்ணேன். வளர்ந்து வரும் நடிகர் இப்படியொரு ரிஸ்க்கான ரோலை எடுத்து செய்ததே பெரிய விஷயம். என்னுடைய சில நண்பர்கள் இந்த கதாபாத்திரத்தை வேண்டாம் என்றே ஒதுக்கியதும் எனக்குத் தெரியும் என்றார்.

கல்யாணத்துக்கு அடுத்த நாளே: சின்ன வயசுலயே நடிக்க வந்துவிட்டேன். கல்லூரி லைஃப் எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன். நந்தாவை பிடித்த நிலையில், அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன். திருமணத்துக்கு அடுத்த நாளே சினிமா ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டேன். குடும்பத்தையும் சினிமாவையும் பேலன்ஸ் செய்வது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ஆனால், கணவரின் உதவியால் அதன் பின்னர் இரண்டையும் சரி சமமாக கையாள கற்றுக் கொண்டேன் என க்யூட்டாக சொல்லி சிரித்தார்.

பெண்களுக்கான படம்: வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகவுள்ள ஃபயர் திரைப்படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மற்ற நடிகைகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம், எனக்கும் அதே அளவுக்கு இருக்கா என்கிற கம்பேரிசன் எல்லாம் எப்போதுமே பண்ண மாட்டேன். என்னுடைய கேரக்டர் பிடித்தால் நடித்து விடுவேன் என்ற சாந்தினி இந்த படம் நிச்சயம் பெண்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு படம் எனக் கூறியுள்ளார். ஆண்களுக்கான மெசேக், குடும்பத்திற்கான மெசேஜும் உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X