இலக்கியாவை எந்த ஆணும் காதலிக்க மாட்டான்.. சில்க் கூட அப்படி செய்யல.. நடிகை சார்மிளா பேட்டி!
சென்னை: இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. இவர் குறித்து நடிகை சார்மிளா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதே நேரத்தில், இலக்கியா தற்போது தனது பழைய பாதையை விட்டு விலகி புதிய திசையில் பயணிக்க தொடங்கியிருப்பதும் கவனிக்கத்தக்க மாற்றமாக பேசப்படுகிறது.
இலக்கியTikTok செயலியின் மூலம் ஆபாசமான ரீல்ஸ் மற்றும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளில் மனதில் இடம் பிடித்தார். பின் டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Instagram அதேபோன்ற கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். இந்த வீடியோவை பார்ப்பதற்கு என்றே இலக்கியாவிற்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலேவர்கள் உண்டு.

இலக்கியா: இந்நிலையில், நடிகை சார்மிளா, ஒரு யூடியூப் பேட்டியில் இலக்கியா குறித்து பேசி உள்ளார். அதில், இலக்கியாவின் வாழ்க்கை முறை சரியான பாதையில் இல்லை, அவர் சரியான வாழ்க்கை வாழவில்லை. இளம் வயதிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்படியான வீடியோக்களை பார்த்தால் அவர்கள் மனநிலைக்கு பாதிப்பு ஏற்படும். சாதாரணமாக சமூக வலைத்தளங்களை திறக்கும் குழந்தைகள் எதிர்பாராத வகையில் இலக்கியாவின் ஆபாசமான வீடியோவை பார்த்தால் அவர்களின் மனதில் தவறான எண்ணம் தோன்றும் என்றார்.
கட்டுப்பாடு இல்லை: கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதா போன்றவர்கள் திரையில் கவர்ச்சியாக நடித்தாலும், பொது நிகழ்ச்சிகளில் மிகவும் மரியாதையாக உடை அணிந்து கலந்து கொள்வார்கள். அந்த காலத்தில் நடிகைகளுக்கு ஒரு வரம்பு இருந்தது. இப்போது சமூக வலைத்தளங்களில் அந்த வரம்பு மங்கிவிட்டது. சினிமாவில் ஆபாசமான காட்சிகள் இருந்தால், அதை குழந்தைகள் பார்க்கக்கூடாது என்பதற்காக "A" சான்றிதழ் தருவார்கள். ஆனால், சமூக வலைத்தளங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாமல், அனைவரும் எளிதாக அணுகக்கூடிய நிலையில் இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.
யார் காதலிப்பா: இப்படி இணையத்தில் கவர்ச்சி காட்டுபவர்களை எந்த ஆணும் விரும்ப மாட்டான், காதலிக்க மாட்டான். ஒரு ஆண் தன் மனைவி தனக்கு மட்டும் தான் என நினைப்பார்கள் நடிகையை திருமணம் செய்து கொண்டால் கூட நடித்துவிட்டியா, அதோடு நிப்பாட்டிக்கோ நாம் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என்று தான் சொல்வார்கள். ஆனால், இலக்கியா போன்றவர்களை யாரும் உண்மையாக காதலிக்க வாய்ப்பு இல்லை, திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு இல்லை என சார்மிளா பேசி உள்ளார்.
இலக்கியாவின் மாற்றம்: அண்மை காலமாக இலக்கியா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவதை விட்டு விலகி, சமையல் செய்வதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த மாற்றம் பலரிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய இலக்கியா, தற்போது தன்னுடைய இமேஜை மாற்ற முயற்சி செய்து வருவது, விமர்சனங்களுக்கு பதிலாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அவர் தனது வாழ்க்கையில் ஒரு புதிய திசையை தேர்வு செய்துள்ளதாகவும், இது போன்ற மாற்றங்கள் மற்றவர்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications