சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு நடந்த கொடுமை.. என்ன வக்கிர புத்தி.. கொந்தளித்த சார்மிளா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற ரோலில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி நாராயணன். இவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாகி உள்ள நிலையில், இதுகுறித்து, நடிகை சார்மிளா Cine Kazhugu யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.
அதில், ஒரு சின்ன பெண்ணை ஆடிஷன் என்ற பெயரில் எந்த மாதிரியான அளவிற்கு மோசமாக நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கும்போது எனக்கு வார்த்தையே வரவில்லை. ஒரு சீரியல் நடிகையை சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று சொன்னவுடன் அந்தப் பெண் இறங்கி போயிருக்கிறாள். குறிப்பாக சினிமாவிற்கு என்று சென்சார் போர்டு என்று ஒன்று இருக்கிறது. சினிமாவில் இவ்வளவு ஆபாசமாக எடுக்க மாட்டார்கள், இது ஒரு தனி நபர் தன்னுடைய ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக செய்த வேலை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமாக கொண்ட ஒரு பெண்ணை தனக்காக அந்த நபர் பயன்படுத்திக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு அப்படி என்ன பண தேவை இருந்ததோ என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அந்த நடிகை செய்தது மிகப்பெரிய தவறு.

சிறகடிக்க ஆசை: இன்றைய காலத்தில் இருக்கும் இளம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருவரை காதலித்தாலும், லவ்வர் தானே வீடியோ கேட்கிறார். அவருக்கு, வீடியோவை அனுப்பினால் தப்பு இல்லை என்று நினைத்து வீடியோவை அனுப்பக்கூடாது. அந்த, அவர்தான் கடைசியில் உங்களை கைவிட்டு விடுவார் என்பதை மறந்து விடாதீர்கள். ஒரு பெண்ணை உண்மையாக காதலிக்கும் எந்த காதலனும் வீடியோவில் ஆபாசமாக வா என்று சொல்லவே மாட்டான் என்பதை முதலில் பெண்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

கொந்தளித்த நடிகை சார்மிளா: சினிமாவில் ஆடிஷன் என்பது ஒரே ஒரு கேமராவை வைத்துக்கொண்டு ஒரே ஒரு நபர் இருப்பது இல்லை. ஆடிஷன் எடுக்கும் போது கேமராமேன், அசிஸ்டன்ட், இயக்குனர் உதவி இயக்குனர் என பலர் சுற்று இருப்பார்கள். அவர்களின் முன்னிலையில் தான் ஆடிசன் நடக்குமே தவிர தனி ஒருவரின் முன்னிலையில் ஆடிஷன் நடக்காது என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சீரியலில் தான் அட்ஜஸ்ட்மென்ட் அதிகம்: இந்த விவகாரம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு சேனலில் பேசியிருந்தார். அதில், சினிமாவில் தான் அட்ஜஸ்மென்ட் அதிகம் என்று சொல்லியிருந்தார். ஆனால் உண்மையில் சினிமாவை விட சீரியலில் தான் அட்ஜஸ்மென்ட் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் சீரியல்களில் தான் இவருக்குப் பின் இவர் என்று போடப்படுகிறது. சில நாட்கள் வரை பொறுத்து இருந்துவிட்டு அவர் தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை தூக்கி விட்டு வேறு ஒருவரை அந்த சீரியலில் போட்டு விடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அந்த கதாபாத்திரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள்.
ஒரு பெண்ணுக்கு மானம் என்பது தான் முக்கியமான ஒன்று, ஆனால், அந்த பெண்ணின் மானமே போய்விட்டது. அந்த பெண்னை உயிரோடு கொன்றுவிட்டார்கள். இதுபோல வக்கர புத்தியுள்ள ஆட்களுக்கு எல்லாம் துபாயில் கொடுக்கப்படுவது போல கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சார்மிளா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











