அம்மா என் குழந்தையைகூட பார்க்கல.. என் தலையில அப்படி எழுதி இருக்கு.. அந்த வலி இப்ப புரியுது.. தேவயானி

சென்னை: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டதிக் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை தேவயானி. வெள்ளித்திரை, சின்னத்திரையிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த போதே, இவர், இயக்குநர் ராஜகுமாரன் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். பலவருடம் குறித்து இதுகுறித்து, பல விஷயத்தை தேவயானி மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், நான் பிறந்தது மும்பையில் தான் அங்கு தான் படித்தேன். எனக்கு நடிப்பு, நடனத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போது தான், ஹிந்தி படம் ஒன்னுக்கு புதுமுகம் ஒன்றை தேடுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. அதன் ஆடிஷனில் கலந்து கொண்டேன் என்னைப்போல பல பெண்கள் அந்த ஆடிஷனிற்கு வந்திருந்தார்கள். அதை பார்த்ததும் என்னுடைய அம்மா எனக்கு வாய்ப்பு கிடைக்காது என நினைத்துக் கொண்டு இப்பொழுதே இங்கிருந்து சென்று விடலாமா என்று கேட்டார். ஆனால், நான் அந்த ஆடிஷனில் கலந்து கொண்டு நடித்து காண்பித்தேன். அனைவருக்கும் என்னுடைய நடிப்பு பிடித்து இருந்ததால், அந்த படத்தில் நான் நடித்தேன். ஆனால், அந்த படம் சில பிரச்சனைகள் காரணமாக இப்போது வரைக்கும் வெளியாகவே இல்லை. அதுதான் நான் நடித்த முதல் படம் அதன் பிறகு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்தேன். அதன் பின்பு தான் தொட்டா சிணுங்கி படத்தில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின், தமிழில் பல படங்களில் நான் நடித்தேன்.

Devayani Rajkumar

நடிகை தேவயானி: சூர்யவம்சம் படத்தில் ராஜகுமாரன் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தார். அப்போதே எனக்கு அவரை தெரியும், பின் நீ வருவாய் என படத்திலும் இருந்தால், அந்த படத்தின் மூலம் அவரை புரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் அந்த படத்தில் எழுதிய காதல் வசனங்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உண்மையாக நேசிக்கும் ஒருவரால் மட்டும் தான் இப்படி உருகி உருகி காதல் வசனத்தை எழுத முடியும் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதேபோல, அவருக்கும் என் மீது ஒரு விருப்பம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். ஒரு நாள் அவர் என்னிடம் காதலை சொன்னார். நான் அப்போது முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒரு கட்டத்தில் நான் அவரை காதலிக்க தொடங்கிவிட்டேன் திருமணம் குறித்து வீட்டில் பேசும்போது வீட்டில் யாருக்கும் பிடிக்கவே இல்லை. அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Devayani Rajkumar

என்னுடைய விதி: என் வாழ்க்கையில் என் அம்மாவை மீறி நான் செய்த ஒரே ஒரு விஷயம் இது தான். அவர்களின் பேச்சை மீறி நான் எதுவுமே செய்ததில்லை. ஆனால், முதன்முறையாக திருமண விஷயத்தை தைரியமாக முடிவு எடுத்து திருமணம் செய்து கொண்டேன். நாளடைவில் அது சரியாகிவிடும் என நினைத்தேன். ஆனால், அது சரியாகவே இல்லை. என்னுடைய முதல் குழந்தை பிறந்த போது கூட அம்மா என்னை வந்து பார்க்கவே இல்லை. அது மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது. அந்த கவலை எதுவுமே தெரியாதபடி என்னை என்னுடைய கணவர் பார்த்துக் கொண்டார். இரண்டாவது குழந்தை பிறந்து சில ஆண்டுகள் கழித்து தான் என்னுடைய அம்மாவை பார்த்தேன்.

நான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று, அம்மாவான பிறகு தான் எனக்கு புரிந்தது. இது எல்லாம் நடக்க வேண்டும் என்று என்னுடைய தலையில் எழுதி இருக்கிறது. அது என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. எங்கோ மும்பையில் பிறந்த நான் தமிழ்நாட்டிற்கு வந்து திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்பது என்னுடைய விதி. அதன்படி நடந்து விட்டது என்று நடிகை தேவயானி தனது திருமணம் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X