Devayani: அவர் வசனத்தில் மயங்கிட்டேன்... கணவர் குறித்து மனம் திறந்த தேவயானி!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர், தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். தேவயானி நடித்த காதல் கோட்டை, சூர்ய வம்சம் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடித்து வரும் தேவயானி தனது காதல் கணவர் குறித்து பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து டாப் நடிகையாக இருந்த தேவயானி, இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய 4 படத்தில் நடித்தார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். ராஜகுமாரன், தேவயானி தம்பதிகளுக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது, தேவயானியின் மகள் இனியா, Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பாட்டுப்பாடி அசத்தி வருகிறார்.

லவ் என்சைக்ளோபீடியா: அண்மையில், நடிகை தேவயானி, தனது காதல் கணவர் ராஜகுமாரனுடன் இணைந்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நீ வருவாயா படத்தில் நடித்த போது அதில் நிறைய காதல் வசனங்களும் வரும் இந்த வசனத்தை பார்த்துத்தான் நான் மயங்கி போய்விட்டேன். அந்த படம் ஒரு லவ் என்சைக்ளோபீடியா மாதிரி படம் முழுக்க காதல் வசனம் அவ்வளவு இருக்கும். ஒவ்வொரு வசனத்தை கேட்கும் போதும், இப்படி ஒரு வசனத்தை எழுத வேண்டும் என்றால், மனதிற்குள் எவ்வளவு காதல் இருக்க வேண்டும் என நினைப்பேன். அந்த ஒரே ஒரு விஷயம் தான் அவர் மேல எனக்கு காதல் வர காரணம். அதுமட்டுமில்லாமல், அவர் பார்த்த விதமும், என்னை படத்தில் அழகாக காட்ட வேண்டும் என அவர் நினைத்ததும் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது என தேவயானி அந்த பேட்டியில் பேசி இருந்தார்.
மறக்க முடியாது நாள்: அதைத்தொடர்ந்து பேசிய ராஜகுமாரன், திருமணத்திற்கு பிறகு நமக்கு குழந்தை வேண்டாம் என்று தேவயானியிட சொன்னேன். ஏனென்றால் இப்படிப்பட்ட ஒரு உலகத்துல நம்ம பிறந்தே இவ்வளவு கஷ்டப்படுறோம். நம்மளுடைய குழந்தையும் பிறந்து கஷ்டப்படணுமா என்று நான் நினைத்து, தேவயானியிடம் உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தை. நம்ம இரண்டு பேரும் இருந்த போதும் என்று சொன்னேன், ஆனால், தேவயானி அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. குழந்தை வேண்டும் என்பதற்காக அவங்க போகாத கோயிலே இல்லை. குழந்தை வரம் வேண்டும் என தேவயானி ஸ்ரீரங்கம் பெருமாளை வேண்டுனாங்க, அங்க வேண்டுதல் படியே எங்களுக்கு சொர்க்கவாசல் திறப்பு அன்னைக்கே இனியா பிறந்தாள். இப்போது முதல் மகள் இனியா டிவியில் பாட்டு பாடி அசத்தி வருகிறாள். இரண்டாவது மகள் பிரியங்காவிற்கு சினிமா மீது விருப்பம் இருக்கிறது. அவருள்ளு ஷாருக்கானை மிகவும் பிடிக்கும், அவர் படம் வெளியான முதல் நாளே படத்தை பார்த்துவிடுவாள், எப்படியாவது ஷாருக்கானுடன் நடித்துவிட வேண்டும் என்பது அவளின் ஆசை என்றார்.


Click it and Unblock the Notifications











