twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive:'அதை நினைச்சாதான் கவலையா இருக்கு..' 'பிச்சைக்காரன்' அம்மாவின் அமெரிக்க லாக்டவுன் அனுபவம்!

    By
    |

    சென்னை: விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படத்தை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தாய்ப்பாசத்தை ஆழமாகக் காட்டிய அந்த படத்தின், 'அம்மா' தீபா ராமானுஜம்!

    கமலின் உத்தமவில்லன், சூர்யாவின் பசங்க 2, சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் உட்பட பல படங்களில் நடித்திருக்கும் இவர், இப்போது இருப்பது அமெரிக்காவில்!

    இவரது கணவர் அமெரிக்காவில் வசிப்பதால், அங்கும் இங்குமாக இருக்கிறார்.

    'அதை' அணியாமல் மொத்தமாக காட்டிய நடிகை.. மீண்டும் கவர்ச்சியை கொண்டு வர போவதாக அறிவிப்பு!'அதை' அணியாமல் மொத்தமாக காட்டிய நடிகை.. மீண்டும் கவர்ச்சியை கொண்டு வர போவதாக அறிவிப்பு!

    முதலில் அறிவித்தது

    முதலில் அறிவித்தது

    கொரோனா வெறிகொண்டு சுற்றி வரும் அமெரிக்காவில், இப்போது எப்படி இருக்கிறது நிலைமை? என்று விசாரித்தோம், இந்த 'அம்மா'விடம். ''கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ பக்கத்துல வசிக்கிறேன். டிசம்பர் மாதம் இங்க வந்தேன். மார்ச் 21 ஆம் தேதி இந்தியா திரும்ப பிளான் இருந்தது. கொரோனா காரணமா, 'யாரும் வெளியில வரவேண்டாம், வீட்டுக்குள்ள இருக்கணும்'னு முதன் முதலா அறிவிச்சது கலிபோர்னியாதான்.

    பீச்சில் கூட்டமாக

    பீச்சில் கூட்டமாக

    மார்ச் 19- லயே இதை அறிவிச்சதும், இந்தியா திரும்ப முடியாதுன்னு அப்பவே முடிவு பண்ணி, திட்டத்தை கேன்சல் பண்ணிட்டேன். இப்ப இங்க சில மாகாணங்களைத் திறந்துட்டாலும் பல மாகாணங்கள்ல 'ஷெல்டர் இன் பிளேஸ்' நடைமுறையில் இருக்கு. இந்த மாசம் கடைசி வரைக்கும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருக்கு. இங்க கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்தினா, உடனே எல்லாரும் கூட்டமா போயி பீச்சுல உட்கார்ந்திடறாங்க.

    லீவு எடுக்காது

    லீவு எடுக்காது

    போன வீக்கென்டுக்கு இப்படி போனதால கொரோனா பாதிப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாயிருச்சு. இதனால, கவர்னர் 'கேவின் நியூஸம்' வருத்தப்பட்டுச் சொன்னார், 'வீக்கென்டுக்கு வைரஸ்லாம் லீவ் எடுக்காது'ன்னு! திடீர்னு லாக்டவுன் அறிவிச்சதும் இங்கயும் மக்கள்லாம் கூட்டம் கூட்டமா வந்து எல்லா பொருட்களையும் மொத்தமா வாங்கிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. எங்க, கிடைக்காம போயிருமோங்கற பயம்தான்.

    மாஸ்க் கண்டிப்பா வேணும்

    மாஸ்க் கண்டிப்பா வேணும்

    அதனால சில பொருட்கள் இன்னும் இங்க கிடைக்கலை. எங்க ஏரியாவுல மாஸ்க் கிடைக்கலை, சானடைசர் கிடைக்கல. இங்கே, மாஸ்க் கண்டிப்பா போடணும். கடைகள்ல ஷாப்பிங் பண்ணுவது நல்ல அனுபவமா இருக்கு. சமூக இடைவெளியை பாலோ பண்ணணும். 'இத்தனை' பேருக்கு மேல கடைக்குள்ள அனுமதி இல்லை. கடைகள்ல ரொம்ப ஹைஜீனிக்கா பண்றாங்க. கேஷ் கவுன்டர்ல ஒருத்தர் நின்னா, அவங்க போனதும் உடனே ஸ்பிரே அடிச்சு சுத்தம் பண்ணின பிறகுதான் மத்தவங்களை அனுப்புறாங்க. சமூக இடைவெளியை கரெக்டா கவனிக்கிறாங்க. இத்தனை பேருக்கு மேல கடைக்குள்ள அனுமதி இல்லை.

    வீடியோவில் டாக்டர்

    வீடியோவில் டாக்டர்

    உடல்நிலை சரியில்லை, டாக்டரை பார்க்கணும்னா, அப்பாயின்மென்ட் வாங்கிட்டு ஜூம் வீடியோவுலதான் பார்க்கணும். குறிப்பிட்ட நேரத்துல டாக்டர் வீடியோவில் வருவார், நாம அவங்ககிட்ட விளக்கணும். என்ன செய்யலாம்னு சொல்வாங்க. அதை செய்யணும். இது ரொம்ப சவுகரியமா இருக்கு. சீரியஸ் கேஸ்னா ஹாஸ்பிடல் போயிடலாம்.

    பெரிய பிரச்னை

    பெரிய பிரச்னை

    இங்க எல்லாருக்கும் வொர்க் ஃபிரம் ஹோம் அப்படிங்கறதால, ஒவ்வொருத்தருக்கும் வீட்டுல வேலை அதிகமாகி இருக்கு. முதல்ல வேளாவேளைக்கு சமைக்க வேண்டியிருக்கு. ஆபிஸ் வேலையும் இருக்கு. குழந்தைகளை கவனிக்கணும், வீட்டை கிளீன் பண்ணணும்னு பெரிய பிரச்னைதான். அங்கயும் (சென்னை) இப்படித்தான்னு நினைக்கிறேன்.

    வேலை போயிடுச்சு

    வேலை போயிடுச்சு

    நான் அமெரிக்காவுல இருந்தாலும், மனசு முழுவதும் சென்னையிலதான் இருக்கு. நம்ம சிட்டியில ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது ரொம்ப கவலையா இருக்கு. இந்த கொரோனா, திரும்பவும் வரதுக்கான வாய்ப்பு இருக்கிறதா சொல்றாங்க. அதுக்குள்ள மருந்து கண்டுபிடிச்சா தப்பிக்கலாம். இங்க நிறைய பேருக்கு வேலை போயிடுச்சு.

    கற்றுக் கொடுத்திருக்கு

    கற்றுக் கொடுத்திருக்கு

    வல்லரசு அமெரிக்காவுக்கே, இந்த நிலைமைன்னா இந்தியாவுல எவ்வளவு பாதிப்பு ஏற்படும்னு நினைச்சா கவலையா இருக்கு. தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்குறவங்க நிலைமையை யோசிச்சா வருத்தம் இன்னும் அதிகமாகுது. இந்த லாக்டவுன் நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்திருக்கு. இனி எல்லாரும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிப்பாங்கன்னு நம்பறேன். மாஸ்க் அணியறதை தொடர்வாங்கன்னும் நினைக்கிறேன்' என்கிறார் தீபா ராமானுஜம்.

    English summary
    Actress Dheepa Ramanujam is in USA now. she shares her USA lockdown experience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X