அட்ஜஸ்ட்மென்டுக்கு அழைத்த இயக்குநர்.. பெரிய ஹீல்ஸ் செருப்பால எட்டி மிதிச்சேன்.. டிஸ்கோ சாந்தி பேட்டி

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. திருமணத்திற்கு பிறகு கடந்த 28 ஆண்டுகளாகச் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், தற்போது 'புல்லட்' என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையொட்டி யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ள அவர், தனது மறைந்த கணவர் குறித்தும், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தி: அதில், என் கணவர் ஸ்ரீஹரியை ரொம்ப பிடிக்கும், அவர் மாரடைப்பால் இறந்த பிறகு எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, அவர் இறப்புல இருந்து என்னால மீண்டு வரவே முடியல. கணவர், குழந்தைகள் தான் என் உலகமா இருந்தது. அவர் ஷூட்டிங் போனா கூட, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிட்டு, சமைச்சு எடுத்துட்டு அவருடன் தான் சாப்பிடுவேன். என்னை அவ்வளவு அன்பா, பாசமா பார்த்துக்கிட்டாரு. நான் என்ன நகை கேட்டாலும், எது கேட்டாலும் என்னுடைய 'பாவா' எனக்கு உடனே வாங்கித் தந்துடுவார். அவருடைய இழப்பை என்னால ஈடு செய்யவே முடியாமல் இருந்தேன் என்றார்.

Disco Shanti interview
Photo Credit:

அட்ஜஸ்ட்மென்ட் புகார்: தொடர்ந்து தனது சினிமா பயணத்தில் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்துப் பேசிய டிஸ்கோ சாந்தி, என்கிட்ட ஒரு இயக்குநர் ரொம்ப தப்பான முறையில நடந்துக்க ட்ரை பண்ணார். அவரோட பேரு ராஜாராம். அந்தப் பேரை நான் இப்போவும் தைரியமா சொல்வேன், எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இந்தியில் 'கர்வாலி பாஹர்வாலி' என்ற படத்தில் நடிச்சப்போ இருந்தே அந்த இயக்குநருக்கு என்னை நல்லா தெரியும். அவர் ஷூட்டிங் முடிஞ்ச பிறகும் எனக்குத் தொடர்ந்து ஃபோன் பண்ணிக்கிட்டே இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தா என்னை ரொம்ப 'கேர்' பண்ணிக்கிற மாதிரி பேசுவாரு, அந்த வயசில் எதற்காக இப்படி இவர் நடந்து கொள்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அப்போதான் அங்கிருந்த ஒரு அக்காகிட்ட ஏன் இவர் இப்படி பண்றார்னு கேட்டேன், அவங்கதான், அவன் உன்கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்றான், ஜாக்கிரதையா இருனு சொன்னாங்க.

எட்டி மிதிச்சேன்: ரெண்டு மூணு நாள் அவரை அவாய்ட் பண்ணிப் பார்த்தேன், ஆனா அவர் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார். நைட் ஃபோன் பண்ணிக்கிட்டே இருந்ததால், அவனை நேர்ல வரச்சொன்னேன். அப்போ நான் பெரிய ஹீல்ஸ் செருப்பு போட்டிருந்தேன். வந்தவனை அந்தச் செருப்பாலயே எட்டி மிதிச்சேன். அதுக்கப்புறம் என்ன ஆகும் ஏதாகும்னு நான் எதைப்பத்தியும் யோசிக்கல. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு படப்பிடிப்பு தளத்துல எந்த ஒரு ஆம்பளையும் என்கிட்ட பேசவே பயந்தாங்க தப்பா என்று அதிரடியாகப் பேசியுள்ளார் டிஸ்கோ சாந்தி.

Disco Shanti interview
Photo Credit:

புல்லட்: தற்போது டிஸ்கோ சாந்தி இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வினுடன் 'புல்லட்' படத்தில் நடித்து வருகிறார். அமானுஷ்ய கதைக்களத்தில் திரில்லராக தயாராகும் இப்படத்தில் டிஸ்கோ சாந்தி குறி சொல்லும் பெண் வேடத்தில் நடிக்கிறார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X