ஆபாச போட்டோ அனுப்பிய 400 பேர்.. வக்கிர நெட்டிசன்களை வெளுத்து வாங்கிய நடிகை காயத்ரி ரெமா!

சென்னை: ஜீ டிவியில் நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி ரெமா. ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'டூரிங் டாக்கீஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இரிடியம், ஒருநாள், மங்களபுரம், ஹரஹரமகாதேவ், காசி மேல காசு, பேய் இருக்க பயமேன் எனப் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் "யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்" படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் சோசியல் மீடியா ஆபாச அத்துமீறல்கள் பேசி உள்ளார்.

நடிகை காயத்ரி ரெமா: அந்தப் பேட்டியில், இன்ஸ்டாகிராமில் இதுவரை எத்தனை பேரை பிளாக் செய்து இருக்கிறீர்கள்? என்று தொகுப்பாளர் கேட்ட நடிகை காயத்ரி ரெமா மிக ஓப்பனாகப் பதிலளித்துள்ளார், அதில்,
இதுவரை இன்ஸ்டாகிராமில் மட்டுமே கிட்டத்தட்ட 300 முதல் 400 பேரை நான் பிளாக் செய்திருக்கிறேன். அதற்கு முக்கியக் காரணம், அவர்கள் அனைவரும் தங்களின் ஆபாசமான தனிப்பட்ட புகைப்படங்களை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எனக்கு டைரக்ட் மெசேஜில் அனுப்பித் தொல்லை கொடுத்தார்கள். இப்படிப்பட்டவர்களை உடனடியாக பிளாக் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

Gayathri Rema interview
Photo Credit:

திருந்தவே மாட்டாங்க: இது போன்ற நபர்கள் மீது நான் எவ்வளவோ புகார்கள் கொடுத்துப் பார்த்தேன். ஆனால், எவ்வளவுதான் புகார் கொடுத்தாலும் திருந்தவே மாட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் நானும் புகார் கொடுத்து அலுத்துவிட்டேன். அதற்குப் பிறகுதான், என்னால் அவர்கள் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போது நேரடியாக பிளாக் செய்யத் தொடங்கினேன். சிலர் இன்ஸ்டா DMல் உங்களை எனக்குப் பிடித்து இருக்கிறது, உங்களோடு போட்டோ எடுக்க வேண்டும், ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று சொல்வார்கள். அதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால், இதுபோல எல்லை மீறி ஆபாசப் புகைப்படங்களை அனுப்புவது மிகவும் மோசமான செயல்.

வரப்பிரசாதம்: சோசியல் மீடியா என்பது இன்றைய தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம். அதில் நாம் கற்றுக்கொள்ளப் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பலர் இதைத் தங்களின் வளர்ச்சிக்கு நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி இருக்கும் போது, தேவையில்லாமல் இது போன்ற ஆபாசப் பதிவுகளையும், புகைப்படங்களையும் அனுப்பித் தொல்லை கொடுப்பவர்களைக் கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும் என காயத்ரி ரெமா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Read more about: பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X