சமுத்திரக்கனி சார் தான் ஹீரோன்னு தெரியாது... இனியா குஷி பேட்டி!
சென்னை : ரைட்டர் படத்தில் தனது அழுத்தமான கேரக்டரால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நடிகை இனியா.
Recommended Video
இந்நிலையில் பில்மிபீட் நிகழ்ச்சிக்காக ரைட்டர் படம், சமுத்திரக்கனியின் கேரக்டர் உள்ளிட்டவை குறித்து பகிர்ந்து கொண்டார்.
மேலும் ரைட்டர் படத்தில் தன்னுடைய கேரக்டர் மற்றும் அதற்கான மெனக்கெடல் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தார்.

நடிகை இனியா
நடிகை இனியா வாகை சூடவா, யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை கோலிவுட்டில் சிறப்பான நடிகையாக வெளிப்படுத்தியுள்ளார். மலையாளத்திலும் இவர் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் வாகை சூடவா இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

சமூக வலைதளங்களில் பிசி
சமூகவலைதளங்களிலும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார் இனியா. அவ்வப்போது புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வைரலாகி விடுகிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் இனியா, சமீபத்தில் வெளியான ரைட்டர் படத்தில் சிறப்பான கேரக்டரை ஏற்று நடித்துள்ளார்.

ரைட்டர் படத்தில் இனியா
இந்தப் படத்தின் கேரக்டர் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் படம் குறித்தும் சமுத்திரக்கனி குறித்தும் பல்வேறு விஷயங்களை இனியா பிலிமிபீட் நேயர்களுக்காக பகிர்ந்து கொண்டார். படத்தில் குதிரை ஏற்றம் போன்றவற்றையும் மிகவும் போல்டாக செய்துள்ளார்.

குதிரையில் இருந்து விழுந்த இனியா
இந்நிலையில் தான் கதக், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றை தன்னுடைய ஓய்வு நேரங்களில் கற்றுள்ளதாகவும் அது தற்போது இந்தப் படத்திற்கு கைகொடுத்ததாகவும் இனியா குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரைட்டர் படப்பிடிப்பில் குதிரையில் இருந்து விழுந்த சம்பவங்களும் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பெரிய அளவில் காயம் இல்லை
குதிரை காலையில் இருந்து சூட்டிங்கில் இருந்ததால் அது டயர்டாகி விட்டதாகவும் தானும் டயர்டாக இருந்ததால் தனக்கும் குதிரைக்கும் கன்ட்ரோல் போனதாகவும் தான் குதிரையில் இருந்து விழுந்ததாகவும் ஆனால் தனக்கு பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சமுத்திரக்கனி ஹீரோன்னு தெரியாது
தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்துள்ள இனியா, இது இயல்பாக நடைபெற்றதாகவும் குறிப்பாக ரைட்டர் படத்தில் அவர்தான் ஹீரோ என்பது முதல் நாள் சூட்டிங்கின்போது அவர் மேக்கப்புடன் வந்தவுடன்தான் தனக்கு தெரியவந்ததாகவும் இனியா குறிப்பிட்டுள்ளார்.

சர்ப்பிரைசான கேரக்டர்
இதுகுறித்து டைரக்டர் பிராங்க்ளின் தன்னிடம் முன்னதாக தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கேரக்டர் தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்ததை போலவே சமுத்திரக்கனியின் கேரக்டரும் தனக்கு ஆச்சர்யத்தை கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர் ஊக்கம்
கடந்த 10 ஆண்டுகளாக தான் திரைத்துறையில் உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் தனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதாகவும் தொடர்ந்து திரையில் சிறப்பான பல்வேறு கேரக்டர்களை செய்ய ஆர்வத்தை எற்படுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











