அந்த பிரச்சனையை போக்க.. வெறும் பாதாம் போதும்.. நடிகை ஜனனி மற்றும் மருத்துவர் மாதுரி பேட்டி!
சென்னை: தெகிடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜனனி மற்றும் மருத்துவர் மாதுரியின் உபயோகமான பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
பெண்களுக்கு இயற்கையாகவே இருக்கும் மாதவிடாய் பிரச்சனை குறித்து பலரும் பேசவே தயங்கி வரும் சூழலில், நடிகை ஜனனி மற்றும் மருத்துவர் மாதுரி வெளிப்படையாக, பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை அடுக்கி சொல்லி உள்ளனர்.

கோடிக்கணக்கில்
நடிகை என்பதால் கோடிக் கணக்கில் செலவு செய்து, பாடியை ரொம்ப ஷேப்பா வச்சிக்கிறாங்க, ஹெல்தியா இருக்காங்க, என்ன என்னவோ சாப்பிடுவாங்க என பெண்கள் யாரும் தவறாகவோ, அந்த விஷயத்தை ரொம்ப பெருசாகவோ எண்ண வேண்டாம் என்ற நடிகை ஜனனி சூப்பரான ஹெல்த் டிப்களை ரொம்பவே சிம்பிளாக அதுவும் ஒரு முக்கிய பொருள் குறித்து பேசியிருப்பது மக்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.

பாதாமின் பயன்கள்
தினமும் சிம்பிளான உடற்பயிற்சி மற்றும் முக்கியமாக பாதாமை ஒரு கைப் பிடி அளவு எடுத்து ஊற வைத்து சாப்பிட்டாலே போதும். அதில் இருக்கும் பயன்களுக்கும் பலன்களுக்கும் அளவே இல்லை. சின்ன வயசுல இருந்து எங்க அம்மா எங்களுக்கு கத்துக் கொடுத்த ஹெல்த் டிப் இது தான் என அழகாக பேசியுள்ளார் நடிகை ஜனனி.

பிக் பாஸ் போட்டியாளர்
பிக் பாஸ் 2ம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில், தனது இயல்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று இருந்தார் ஜனனி என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி வெற்றிகரமாக சென்று கொண்டுள்ள நிலையில், பிக் பாஸ் 2வது சீசன் பற்றிய நினைவலைகளும் ஜனனியின் பேட்டியை பார்த்தால் ரசிகர்களுக்கு எழும்.

மருத்துவர் மாதுரி
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை எப்படி லாவகமாக கையாள வேண்டும் எனவும் எளிய முறைகளை பயன்படுத்தியே பிரச்சனைகளை சரி செய்யலாம் என மருத்துவர் மாதுரி விரிவாக பேசிய பேட்டியை காணத் தவறாதீர்கள்.
ஆண்களும் கட்டாயம் பாருங்க
மாதவிடாய் டாப்பிக் என்றதும் பெண்கள் பார்க்க வேண்டியது என நினைக்காமல், குறிப்பாக ஆண்களும், பெண்களின் வலிகளை அறிந்து அந்த காலத்தில் அவர்களுக்கு கூடுமான வரையில் உதவி செய்ய கற்றுக்கொள்ள இந்த பேட்டியை மறக்காம பாருங்க!


Click it and Unblock the Notifications











