இப்போதைக்கு நடிக்கவில்லை.. வாய்ப்புகள் வந்தால் பார்க்கலாம்.. காதல் சந்தியா எக்ஸ்குளூஸிவ்!
சென்னை: இப்போதைக்கு நடிக்கும் ஐடியா இல்லை என நடிகை காதல் சந்தியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
மிஸ் தமிழ்நாடு காலண்டர் லாஞ்ச் ஈவன்ட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நடிகை காதல் சந்தியா. அப்போது பிலீமி பீட் தமிழ் தளத்துக்கு அவர் சிறப்பு நேர்காணல் அளித்தார்.

இதில் பேசிய சந்தியா 2020ல் தனது 4 வயது மகளை நினைத்துதான் தனக்கு மிகுந்த கவலையாக இருந்ததாக கூறினார். 4 வயதில் அவருக்கு ஆன் லைன் வகுப்புகள் புரியவில்லை இன்று ஆதங்கப்பட்டார்.
தொடர்ந்து மிஸ் தமிழ்நாடு காலண்டர் லாஞ்ச் ஈவன்ட்டில் பங்கேற்றது குறித்து பேசிய காதல் சந்தியா, தன்னுடைய ஃபிரண்ட் நடத்தும் ஈவன்ட் என்பதால் பங்கேற்றதாக கூறினார். மேலும் நடிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த சந்தியா, இப்போடதைக்கு எந்த ஐடியாவும் இல்லை நல்ல வாய்ப்புகள் வந்தால் யோசிப்பேன் என்றார்.
மேலும் எல்லோரும் மாஸ்க் போடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த ரசிகர்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











