திரிஷா மட்டுமா? இன்னும் நிறைய இருக்கா..விஜயின் ரசிகைனு சொல்லவே அசிங்கமா இருக்கு!

சென்னை: தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் விஜய் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைத்தார். இதையடுத்து விஜய், த்ரிஷா இணைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் இதை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

நடிகை காஜல் பசுபதி: அந்த வகையில் Wow Tamizhaa யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும், நடிகை காஜல் பசுபதி, விஜய், திரிஷாவுடன் திருமணத்திற்கு வந்ததை பார்த்து உங்களின் ரசிகையாக இருப்பதை நினைத்து நான் அசிங்கப்படுகிறேன். விஜய் ஒரு ஃபிளாப் ஹீரோவாக இருக்கும் போதே, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சங்கீதா. அவர் சாதாரணமானவர் இல்லை கோடீஸ்வரி. பிளாப் ஹீரோ என ஒட்டுமொத்த சினிமாவும் அவரை வசை பாடிய போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதாவை, இப்போது நீங்கள் உச்சத்தை அடைந்து விட்டீர்கள் என்பதற்காக கழட்டி விடலாமா?

Vijay Sangeetha Trisha

ஜோடி போட்டு வரலாமா: சங்கீதா கடந்த ஐந்து ஆண்டுகளாகவே போராடிக் கொண்டு இருந்து இருக்கிறார். 2021ஆம் ஆண்டில் இருந்தே, இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. ஒன்லி திரிஷா மட்டுமா, இன்னும் நிறைய பேர் இருக்கிறார்களா என தெரியவில்லை. இவை அனைத்தும் கண்ணுக்கு மறைவாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், பொது நிகழ்ச்சிக்கு ஜோடி போட்டு வந்து எதை நிரூபிக்க விரும்புகிறார். எங்க அண்ணா விஜய் அப்படி இல்லை, திரிஷா அவரின் தோழிதான் என சொன்ன எங்களுக்கெல்லாம் அப்போது செருப்பால் அடித்தது போல இருக்கிறது.

கண்டிக்கவில்லை: சில தற்குறிகள் சங்கீதாவை பற்றிய தரக்குறைவான விமர்சனம் செய்கிறார்கள், இது குறித்து விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிட வில்லை. இத்தனை நாள் வாழ்ந்த மனைவியை பற்றி தவறாக பேசியதை அவர் கண்டிக்கவில்லை. அதேபோல, திரிஷாவை பற்றியும் கடுமையான விமர்சனங்கள் வருகிறது. இரண்டு பெண்களை தான் கேவலப்படுத்தி பேசுகிறார்கள், தவறு செய்தால் ஆண்களைப் பற்றிய யாரும் பேசுவது என அவர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X