சொத்துக்காக கொல்லப்பாத்தாள்.. உயிலில் போலி கையெழுத்து.. கனகாவின் அப்பா தேவதாஸ் கண்ணீர் பேட்டி!

சென்னை: ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கனகா. இந்த படத்தின் வெற்றிக்கு பின் புகழின் உச்சிக்கு சென்ற கனகா. 2000ம் ஆண்டுக்கு பின் எங்கே போனார்... என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியவில்லை. யாருமே இல்லாத வீட்டில் தனியாக இருக்கும் நடிகை கனகாவின் வாழ்க்கை இப்ப வரைக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்நிலையில், கனகாவின் அப்பாவும், இயக்குநருமான தேவதாஸ் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில், சினிமாவிற்கு வந்தேன், ஆனால், காலம் என்னை ஒரு கதாநாயகிக்கு கணவனாக மாற்றிவிட்டது. அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளால் தற்போது எல்லாவற்றிலும் இருந்து விலகி இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் 50க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவர் மட்டும்தான் தற்போது என்னை கவனித்துக் கொண்டு இருக்கிறார். என்னுடைய மகள் கனகாவுக்கு நான் பல அறிவுரைகளை கூறியிருக்கிறேன். ஆனால், அவளுக்கு படிப்பு அறிவு கம்மி, அவள் அளித்த பேட்டிகளை நான் பார்த்தேன் அதில் ஆறாவது வரை படித்திருப்பதாகவும், ரெட்டை குழந்தை என்று பல பொய்களை அவள் சொல்லிக் கொண்டே இருக்கிறாள்.

kanaka devika Devadoss

காதல் திருமணம்: தேவிகா இறந்த பிறகு, நான் கனகாவிடம் தனியாக இருப்பது நல்லது இல்லை. திருமணம் செய்து கொண்டு, குழந்தை குட்டியோடு நன்றாக இரு என்று சொன்னேன். ஆனால் கனகா, நீங்க யாரையாவது இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டாள். தேவிகா, திடீரென ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்துவிட்டதால், எந்தவிதமான உயிலையும் எழுதி வைக்கவில்லை. ஆனால், கனகாவுக்கு யாரோ தவறான அட்வைஸ் கொடுத்து, உயிலில் தேவிகா போல கையெழுத்து போட்டு இருக்கா, அந்த கையெழுத்தை யார் போட்டார்கள் என்று எனக்குத் தெரியாது. தேவிகா இறப்பதற்கு முன்னாடியே, இந்த வீடு சம்மந்தமாக வழக்கு போட்டு அந்த வழக்கில் அவர் தோற்றுப்போனார். தேவிகா இறந்த பிறகு கனகாவும் என் மீது வழக்கு போட்டோர். இந்த வழக்கு பேப்பரை நான் பார்க்கும் போது, தேவிகாவின் கையெழுத்து மாறி இருந்தது. அந்த வழக்கின் போது தான், நான் கனகாவை பார்த்தேன். அப்போது, கனகா என்னைப் பார்த்து நீங்க யார் என்று கேட்டாள். அப்போ நான்தான் உன்னுடைய அப்பா என்று, அறிமுகப்படுத்திக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன் என்று அழுதேன். அன்னைக்கு மட்டும் 100 முறை கனகா என்னை அப்பா என்று அழைத்தார். கனகா பிறந்து 3 வயது வரை தான், நான் அவளுடன் இருந்தேன். இப்போது வரைக்கும் நாங்கள் சேரவே இல்லை.

kanaka devika Devadoss

கொல்லப்பார்த்தாள்: தேவிகா பாவமன்னிப்பு படத்தில் நடித்த போது நான் உதவி இயக்குநராக இருந்தேன், அவளுக்கு என் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, என்னை காதலிப்பதாக சொன்னாள். நான், அப்போது வெறும் 200 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். இதனால், இது சரிபட்டு வராது என்று சொல்லிவிட்டேன். ஆனால், தேவிகா என்னை விடாது துரத்தி காதலித்து திருமணம் செய்த கெண்டாள். திருமணத்திற்கு பிறகு சில வருடங்களுக்கு பின் நான் இயக்கிய முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தேசியவிருது கிடைத்தது அது நான் எதிர்பார்க்காத ஒன்று. அதன் பின் எனக்கு வசதி வாய்ப்புகள் எல்லாம் வந்துவிட்டது. ஆனால், அதன்பின் இந்த சொத்துக்கான தேவிகா என்னை கொல்ல முயற்சி செய்தாள், ஆள் வைத்து அடித்து, என் மீது போலீஸ் புகார் கொடுத்தார் என்று கனகாவின் அப்பா பல விஷயத்தை அந்த பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X