நான் குடிகாரியா? 40 ஆயிரத்துக்கு சரக்கா? நடிகைனா என்ன வேணும்னாலும் பேசலாமா.. நடிகை கஸ்தூரி!
சென்னை: 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை கஸ்தூரி பிரபு, கார்த்திக், சரத்குமார், விஜயகாந்த் எனப் பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே தைரியமாக கருத்துக்களை பதிவிடும் கஸ்தூரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில், சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
கஸ்தூரி பேட்டி: அதில், பொதுவாக நடிகையாக இருந்தால், அவளை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற மனநிலை இங்கு இருக்கிறார். அவர்களை பற்றி பேசுவதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பணத்திற்காகவும் வீவ்ஸிற்காகவும் எது வேண்டுமானாலும் பேசுகிறார்கள். ஒரு முறை நான் ஒரு ஹோட்டலில் 40 ஆயிரம் ரூபாய்க்கு மது வாங்கி குடித்தேன் என்று முக்தர் விவாதத்தில் பேசினார். திமுக ஆட்சியில் எனக்கு குடிகாரி என பட்டம்கட்டபார்த்தார்கள். அந்த முக்தர் இப்படி பொய் பேசித்தான் இப்போது சிறையில் இருக்கிறார். அவர் பேசுவதில் ஒரு விஷயம் கூட உண்மையாக இருக்காது. நான் மதுவுக்கு எதிரானவள், நான் மது குடித்ததே இல்லை எனக்கு அந்த பழக்கம் இல்லை. மது அருந்துவதை எப்போதும் எதிர்க்கிறேன். ஆனால், நான் 40 ஆயிரம் ரூபாய்க்கு மது வாங்கி குடித்ததாக கூறினார்.

பாரில் டான்ஸ்: அதற்கு இதோ ஆதாரம் என்று நானும் என்னுடைய நெருங்கிய தோழியும் திருமண வரவேற்பில் லைட் மியூசிக் நிகழ்ச்சியில் ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தோம். அதை யாரோ வீடியோ எடுத்து, நாங்கள் பாரில் மது அருந்திவிட்டு ஆடுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். நான் நடிகை என்பதால் என்னைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால் என்னுடன் இருந்த என் தோழி என்ன தவறு செய்தார்? அந்த வீடியோவை பார்த்து அவர் மிகவும் மனவேதனை அடைந்தாள், அவளுக்கு நான் என்ன பதில் சொல்வது? இதுகுறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றால், யார் அந்த வீடியோவை பதிவிட்டது என்றே தெரியவில்லை
ஆதங்கம்: சென்னை நகரத்தில் எத்தனை பார்கள், பப்புகள், டாஸ்மாக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் இருக்கின்றன. அங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டும்தானா செல்கிறார்கள்? அவர்களை நம்பித்தான் அந்த தொழில்கள் நடைபெறுகின்றனவா? அப்படியிருக்க, ஏன் சினிமாக்காரர்களை மட்டும் குற்றம் சொல்கிறார்களா? பாருக்கு போகிறார்களா? அங்கு இருக்கும் மற்றவர்கள் எல்லாம் யார்? என்று நடிகை கஸ்தூரி ஆதங்கப்பட்டு பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications