தொழிலதிபருடன் கிசுகிசு.. என் காதலுக்கு குறுக்கே இருந்த சினிமா.. நடிகை கஸ்தூரி மனம் திறந்த பேட்டி!

சென்னை: தென்னிந்திய திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக பிரபலமடைந்த கஸ்தூரி சங்கர், தற்போது சமூக அரசியல் விஷயங்களில் நேர்மையான கருத்துகளைப் பதிவு செய்வதற்காக அதிகம் பேசப்படுபவர். சர்ச்சைக்குரிய கருத்துகளை தயங்காமல் வெளிப்படுத்தும் தன்மை கொண்ட கஸ்தூரி பல விஷயத்தை Touring Talkies யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நான் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணமே பெரிய தொழில் அதிபர் ஒருவருடன் இணைத்து கிசுகிசு செய்தி வெளிவந்தன. நான் அந்த நபரை ஒரே ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன். ஆனால், அவரையும் என்னையும் இணைத்து காட்டித்தீ போல வதந்தி பரவியது. உண்மை ஆமை போல நடந்து வந்தது. வதந்தியால், என்னுடைய பெற்றோர் வேதனை அடைந்தனர். நான் நெருப்பு என்பது அவர்களுக்கு தெரிந்தாலும் இந்த வதந்தி அவர்களை வேதனை படுத்தியது. இதனால், எனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள். அவர்களின் விருப்படி திருமணத்திறக்க வரன் தேடினார்கள். திட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் தான் திருமணமே நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், மாப்பிள்ளை அமெரிக்கா என்பதால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது.

Kasthuri interview
Photo Credit:

நடிகை கஸ்தூரி பேட்டி: தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவருக்கும் என்னை பிடித்து இருந்தது. இந்த விஷயத்தை நான் அம்மாவிடம் சொன்னபோது அம்மாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், தயாரிப்பாளராக இருந்தாலும் நடிகையை திருமணம் செய்து கொண்டால் அந்த திருமண வாழ்க்கை நன்றாக இருக்காது என பல விஷயங்களை உதாரணமாக காட்டி பேசினார். இதனால் வேறு வழியே இல்லாமல் உங்கள் விருப்பப்படியே வரன் பாருங்கள் என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தான் சங்கரை பார்த்து திருமணம் செய்துவைத்தார்கள்.

தயாரிப்பாளரை காதலித்தேன்: திருமணம் நடந்து நான் அமெரிக்காவிற்கு சென்ற பிறகுதான் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், முடியாது என்று சொல்லிவிட்டேன். இதனால் நான் சினிமாவை மிகவும் மிஸ் செய்தேன். என்னை பற்றி வந்த ஒரே ஒரு கிசுகிசுக்கே பெற்றோர் பயந்து எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். ஆனால், இப்பொழுது என்னைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி இணையத்தில் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால், என்னுடைய கணவரின் குடும்பத்தார் அதை நன்றாக புரிந்து கொண்டு, எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நல்லவர்களின் மனதில் நல்லதை மட்டும் தான் நினைப்பார்கள் என்று தனது கணவரின் குடும்பம் குறித்தும் கணவர் குறித்தும் மிகவும் உயர்வாக பேசி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X