மாமா இங்கதான் இருக்கேன் வந்துடுங்க.. பீடை அபிராமியை தூக்கில் போடுங்க.. கஸ்தூரி ஆதங்கம்!

சென்னை: திருமணத்தை மீறிய உறவால் பெற்ற இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு கேரளாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்ட குன்றத்தூர் அபிராமி கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கை காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் விசாரித்து வந்தது நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெற்ற குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொன்ற அபிராமிக்கு சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து Nakkheeran TV சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி, டிக் டாக் அபிராமி. பிரியாணி அபிராமி 2017 ஆம் ஆண்டு, இந்த கொலை பாதக செயலை செய்தபோதே இந்த விஷயம் குறித்து நான் பேசி இருக்கிறேன். ஆறே ஆண்டில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்திருக்கும் நீதிமன்றத்திற்கு முதலில் நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால் முதலில் இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. பின் மாவட்டம் பிரிக்கப்பட்டதால், இந்த வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.

Kundrathur Abhirami Kasthuri case

மன்னிப்பே இல்லை: இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களே, மிகப்பெரிய குற்றத்தை செய்த இந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனை தான் கொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு சட்டம் ஒத்துழைக்காததால் நான் சாகும் வரை சிறையில் இருக்கும், அதுவும் கடுமையான ஆயுள் தண்டனை விதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்தியாவில் குழந்தைகளை ஏதோ ஒரு சூழ்நிலைக்காக கொலை செய்யும் சம்பவங்கள் நடந்திருக்கிறது. அது எல்லாம் திட்டமிட்டு நடக்கும் கொலைகள் இல்லை. ஆனால், இந்த அபிராமி செய்தது திட்டமிட்ட கொலை. தன்னுடைய காம இச்சைக்கு தடையாக இருந்த தன்னுடைய குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று இருக்கிறார். தன்னுடைய கணவனுக்கும் பாலில் மாத்திரையை கலந்து கொடுத்து இருக்கிறார். அதில் வீரியம் குறைவாக இருந்ததால் அவர் தப்பித்துக்கொண்டார்.

குற்ற உணர்வே இல்லை: கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு நாகர்கோவிலுக்கு சென்ற போது தான், அபிராமியின் காதலன் மீனாட்சி சுந்தரத்தை பிடித்து ஃபோனில் பேச வைத்த போதும் கூட, கொலை செய்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியே இல்லாமல்... "மாமா இங்கே தான் இருங்கேன் வந்துடுங்க" என்று ஜாலியாக பேசி இருக்கிறாள். இந்த மாதிரி ஒரு பேயை, ஒரு பீடையை தூக்கில் போடுவது தான் நியாயம். மக்களின் வரி பணத்தை செலவு செய்து ஆயுள் முழுவதும் சோறு போட்டு நல்லபடியாக வைத்து இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், மரண தண்டனை கொடுக்க முடியாது என்பதால், கடுமையான ஆயுள் தண்டனை கொடுத்து இருக்கிறார். இதில்,சிறையில் இருக்கும் அபிராமிக்கு கடுமையான வேலைகள் கொடுக்கப்படும். இதில், அபிராமி மேல்முறையீடு செய்தாலும் அவர் வெளியில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், மீனாட்சி சுந்தரம் நேரடியாக இந்த கொலையில் தொடர்பு இல்லாததால், மேல் முறையீடு செய்து வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நடிகை கஸ்தூரி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X