அமைதிப்படை" அல்வா" சீன் எடுக்கும் போது.. என்ன நடந்தது தெரியுமா? கஸ்தூரி சொன்ன அந்த விஷயம்!
சென்னை: 1994 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதி படம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வெற்று வசூலையும் அள்ளியது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜ இசை அமைத்து இருந்தார். இதில், சத்யராஜ் அம்மாவாசை என்கிறி கதாபாத்திரத்தில், ஒரு அரசியல்வாதியாக நடித்திருப்பார். அதேபோல, நடிகை கஸ்தூரி தாயம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரை அந்த படத்தில் வரும் அல்வா சீன் பேசப்பட்டு வருகிறது.
இந்த அல்வா சீன் குறித்து, நடிகை கஸ்தூரி அவர்கள் Galatta youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அந்தக் காட்சியை எடுக்கும்போது என்னை விட மிகவும் கஷ்டப்பட்டது சத்யராஜ் சார் தான், என் மீது மொத்த பாரத்தையும் போட்டு விடக்கூடாது என்பதற்காக, கை மூட்டியை வைத்து தாங்கிக்கொண்டு நடித்து இருந்தார். நானும் பரவாயில்லை சார், என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அந்த காட்சியில் நான் எந்தவிதமான சங்கடத்தையும் அடைந்துவிடக்கூடாது என்பதில், அவர் உறுதியாக இருந்தார். உண்மையில் அவர் ஒரு ஜெட்டில்மேன்.

நடிகை கஸ்தூரி: நான் அல்வாவை சாப்பிட்டுவிட்டு மயங்கி பாறையின் மீது கண்ணை மூடிக்கொண்டு படுத்திருப்பேன், கேமராவில் என் முகம் தெரியவேண்டும் என் உடலும் தெரிய வேண்டும், இப்படி பல சங்கடங்கள் எனக்கும் இருந்தது. ஆனால், அந்த நேரத்திலும் இயக்குநர் மணிவண்ணன் சார், சத்யராஜுக்கு டயலாக் சொல்லுகிறார். எனக்கு அது காதில் கூட விழவில்லை. ஆனால், சத்யராஜ் சாரும் மணிவண்ணன் சாரும் கணவன் மனைவி போல அந்த நேரத்தில் டயலாக்குகளை மாறி மாறி பேசினார்கள். நான் பேச நினைப்பது எல்லாத்தையும் நீ பேச வேண்டும் என்பது போல, அன்று சத்யராஜ் செய்தார். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்குள் ஒரு புரிதல் இருந்தது. அந்த காட்சி படமாக்கும் போது அம்மா அருகில் தான் இருந்தார்கள். சத்யராஜ், மணிவண்ணுக்கும் இருக்கும் புரிதலை பபார்த்துவிட்டு, உண்மையில் அம்மா வியந்து போய்விட்டார்.
அல்வா சீன்: அந்த காட்சி எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால், அந்த படத்தை தியேட்டரில் பார்த்து வியர்ந்து விட்டேன். அந்த காட்சியில் நான், நன்றாக தான் நடித்து இருக்கிறேன். சரியான ரியாக்ஷன் கொடுத்திருக்கிறேன், நான் எதிர்பார்த்ததை விட அந்த சீன் ஹாட்டாக வந்திருந்தது. இளையராஜா சாரின் மியூசிக்கும், அந்தக் காட்சியும் பார்த்துவிட்டு செம ஹாட் மச்சி என்று எனக்கு தோன்றியது. அதுதான் சினிமாவின் மேஜிக் என்பதை அன்று தான் நான் புரிந்து கொண்டேன். எனக்கும் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்திருந்தால், நானும் அந்த காட்சியை பார்த்துவிட்டு தவறான கமெண்டுகளை தான் கொடுத்து இருப்பேன். ஏனென்றால் அந்த படத்தில் அந்த காட்சி அந்த அளவுக்கு ஹார்டாக இருந்தது என்று நடிகை கஸ்தூரி அமைதிபடை படம் குறித்து பல விஷயத்தை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











