‘குத்துவிளக்கு‘ ஐட்டம் பாடலுக்கு ஆடுனேன்.. என் பொண்ணே கேக்குறா.. கஸ்தூரி பேட்டி!
சென்னை: சினிமா, அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து துணிச்சலாக கருத்து தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது திரைப்பயணம், மற்றும் சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், ஒரு நடிகையாக இருப்பதால், அனைவரும் சுலபமாக விமர்சித்து விடுகிறார்கள். நடிகை தானே எதுவேண்டுமானாலும் சொல்லலாம் என்கிற எண்ணம் அவர்களின் மனதில் இருக்கிறது. அதுவும் சமூக வலைத்தளங்களில் முகத்தை மறைத்துக்கொண்டு வரம்பு மீறி விமர்சனங்களை செய்து வருகிறார்கள் என்றார். தொடர்ந்து தமிழ் படத்தில் வரும் ஐட்டம் பாடலான 'குத்துவிளக்கு' பாடலுக்கு நடனமாடியது குறித்து பேசிய கஸ்தூரி. ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதை நான் பெருமையாக நினைக்கிறேன். இன்று என் மகளுக்கு 20 வயதாகிறது. அவளே 'அம்மா, இந்த பாடலுக்கு எப்போது ஆடினீர்கள்?' என்று கேட்கும் போது பெருமையா இருக்கு.

குத்துவிளக்கு பாடல்: தமிழ் படத்தின் முதல் பாகத்தில் குத்துவிளக்கு பாடலுக்கு நான் ஆடியபோது என் மகள் பிறந்திருந்தாள். பின்னர் இரண்டாம் பாகத்தில் ஆடியபோது என் மகன் பிறந்துவிட்டான். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அதே உற்சாகத்துடனும் உடல்தகுதியுடனும் என்னால் நடனமாட முடிகிறது என்றால், அதற்காக என் ஃபிட்னஸைப் பாராட்ட வேண்டும். ஒரு சில நல்ல பத்திரிகையாளர்கள் தான் என்னைப் பாராட்டினார்கள். ஆனால் ஒரு சிலர் என்னை படு மோசமாக விமர்சனம் செய்து இருந்ததை நான் பார்த்தேன்.
எச்சரிக்கையா இருக்கணும்: இதுபோன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் துவண்டு போகவே மாட்டேன். இதுபோன்ற விமர்சனங்கள் எனக்கு மட்டும் வருவதில்லை நடிகை சமந்தாவும், த்ரிஷாவும் சந்திக்காத விமர்சனங்களா? த்ரிஷாவின் வீடியோ என்று இணையத்தில் வெளியானது அது ஆணா, பெண்ணா என்று கூட யாருக்கும் தெரியாது, ஆனால், அது த்ரிஷா என்று சொன்னார்கள். அது மட்டுமில்லாமல் இப்போது AI வேறு வந்துவிட்டது, இனி நடிகைகள் இன்னும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் பல விஷயம் குறித்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications