தாலியோட ஈரம் கூட காயல.. பாவிகளா கொன்னுட்டீங்களே.. கஸ்தூரி கதறல்!
சென்னை: வரதட்சனை கொடுமையால் ரிதன்யா, திருமணமான 3 மாதங்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், சம்பந்தப்பட்ட கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தையே கலங்க வைத்த இந்த ரிதன்யாவின் தற்கொலை குறித்து Galatta Voice யூடியூப் சேனலுக்கு நடிகை கஸ்தூரி பேட்டி அளித்துள்ளார்.
அதில், ஏன் அந்தப் பெண் அப்படி ஒரு முடிவை எடுத்தால் என்று என் மனம் கிடந்து அடித்துக் கொண்டே இருக்கிறது. வாழ நினைத்தால் வாழ்ந்து இருக்கலாம். இல்லை வேறு எங்காவது ஓடி போயாவது இருக்கலாம். ஆனால், நிதன்யா இந்த முடிவை ஒரே நாளில் எடுத்து இருக்க வாய்ப்பே இல்லை. ஏப்ரல் மாதம் தான் திருமணமே நடந்திருக்கிறது. இன்னும் மூன்று மாதம் கூட ஆகாத நிலையில் அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டிய தாலி ஈரம் கூட காயவில்லை.

நடிகை கஸ்தூரி கதறல்: கணவன் மாமனார் மனைவி என்ற ஈவு இரக்கமில்லாத அந்த மூன்று பேர் கொண்ட கொடூரர்கள் வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை நன்றாக வாழ வைப்பார்கள் என்று நினைத்தால். திருமணமான முதல் நாளில் இருந்தே வரதட்சனை கேட்டு அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் 2025-ல் வரதட்சணை கொடுமை நடக்கிறது என்பது கேவலமான விஷயம். கணவன், மாமனார், மாமியார் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு, ஈவு இரக்கமில்லாத கொடூரர்கள். வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை நன்றாக வாழ வைப்பார்கள் என்று நினைத்தால். திருமணமான முதல் நாளில் இருந்தே வரதட்சனை கேட்டு அந்த பெண்ணை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் 2025-ல் வரதட்சணை கொடுமை நடக்கிறது என்பது கேவலமான விஷயம்.
இதுதான் குடும்ப கௌரவமா: அந்த பெண்ணின் தற்கொலைக்கு அவர்கள் மட்டும் காரணமில்லை, அந்தப் பெண் எனக்கு இந்த மாதிரியான சித்திரவதை நடக்கிறது என்றும், வீட்டில் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பெற்றோரிடமும், உறவினர்களிடமும் கூறிய போது நம்முடைய குடும்ப கௌரவம் கெட்டு விடும், எது நடந்தாலும் பொறுத்துக்கொள் என்று பஞ்சாயத்து பேசி அந்த பெண்ணை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். கொடுமை நடக்கிறது என்று பெத்த மகள் உங்களிடம் வந்து கதறும் போது பொறுத்துக்கொள் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? அந்தப் பெண் கடைசியாக வாய்ஸ் நோட், அனுப்பி இருப்பதிலும், இந்த முறை நான் தவறு செய்யவில்லை அப்பா, இனிமேல் நான் உங்களுக்கு சுமையாக இருக்க மாட்டேன் என்று சொல்லி கதறி அழுகிறாளே இதுதான் உங்களுடைய குடும்பம் கௌரவமா? மகள் இறந்து விட்டால் இப்பொழுது அந்த குடும்ப கௌரவத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்.
தயவு செய்து இதை செய்யாதீர்கள்: படித்த பெண்களுக்கு நடக்காது, பணக்கார பெண்களுக்கு இது நடக்காதென்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நன்றாக படித்த, வசதி படைத்த ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நடந்து இருப்பதை பார்த்து மனம் பதறுகிறது. நிர்பயா வழக்கில் எப்படி பலர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவளை கொன்றார்களோ... அதே போல, இந்த பெண் விஷயத்தில் மூன்று பேர் கூட்டு சேர்ந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணை சித்திரவதை செய்து கொன்று இருக்கிறார்கள். தயவுசெய்து எந்த ஒரு பெண்களாக இருந்தாலும் துணிந்து வாழ்க்கையில் போராடுங்கள், அனைத்து பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு இல்லை என கஸ்தூரி கண்ணீருடன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











