அகமதாபாத் விமான விபத்து: அது எப்படி அவன் மட்டும் தப்பிச்சான்? கஸ்தூரி பேட்டி!

சென்னை: அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. 242 பேர் பயணம் செய்த அந்த விமானத்தில் விஸ்வாஸ் குமார் என்ற ஒற்றை நபர் மட்டுமே உயிர் தப்பித்துள்ளார். அந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்த நிலையில், இவர் மட்டும் எப்படி தப்பித்தார் என்று பலர் கேட்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்று நடிகை கஸ்தூரி பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து போயிங் டிரீம்லைனர் 787 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 12 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் சில நிமிடங்களிலேயே, பிஜே மருத்துவக்கல்லூரி விடுதியின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில்
பயணம் செய்த 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். மருத்துவ மாணவர் விடுதியில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த பலரும் இதில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 265 பேர் இதுவரை உயிரிழந்ததாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

ahamadabad plane crash kasthuri
Photo Credit:

விமான விபத்து: இந்த கோர விபத்தில் இருந்து விஸ்வாஸ் குமார் என்பவர் மட்டுமே உயிர்பிழைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. கடைசி நேரத்தில் உயிர்பிழைத்த விஸ்வாஸ் குமார், இருக்கைக்கு பின்னால் இருந்த வழியில் தப்பித்தேன். நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை என கூறியிருந்தார். அதைப்பார்த்த பலர், பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்த போது இவர் மட்டும் எப்படி உயிர் தப்பினார். எப்படி என்றால், விபத்துக்கு இவர் தான் காரணமாக என சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய நடிகை கஸ்தூரி, அது எப்படி அவன் மட்டும் தப்பிச்சான்? அதற்கு காரணம் இவர் தானா என்றேல்லாம் எழுதுகிறார்கள். இப்படி பலர் சொல்வதை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.

மனச்சாட்சி இல்லையா?: உயிர்பிழைத்த விஸ்வாஸ் குமார், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த லண்டன்வாசி, இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள். பிரிட்டனில் தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார். தனது பெற்றோரை பார்க்க இந்தியா வந்த இவர், தனது இளைய சகோதரனுடன் பிரிட்டன் திரும்பிய போது, இந்த விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறார். இவருடன் பயணம் செய்த இளைய சகோதர் அந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நேரத்தில் யாரையும் குறை சொல்லாதீர்கள். அரசாங்கம் மெத்தனமாக இருந்தது. கவனக்குறைவாக இருந்தங்க என்ற பேச்சுக்கு இடமே இல்லை. ஏன் என்றால், இந்த விபத்தில் முன்னாள் முதலமைச்சரே உயிரிழந்து இருக்கிறார். இப்படி இருக்கும் போது, அவர் மீது தவறு, இவர் மீது தவறு, மோடிக்கு நேரம் சரியில்லை என்று மனிதாபமான மற்ற முறையில் பேசுவதை கேட்கும் போது வேதனையாக இருக்கிறது, எந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பதை தெரிந்து பேச வேண்டும் என்று நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X