கணவருக்காக எமனுடன் போராடினேன்.. கடைசியில் போச்சே.. கதறி அழுத நடிகை கவிதா!
சென்னை: 1970 மற்றும் 80களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை கவிதா. குழந்தை நட்சத்திரமாக தனது பத்தாவது வயதிலேயே தெலுங்கு படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர். 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கொரோனாவில் கணவர் மற்றும் மகனை ஒரே நேரத்தில் பறிகொடுத்த இவர், வாழ்க்கையில் தான் சந்தித்த கஷ்டத்தை கண்ணீர் வீட்டு பேட்டி அளித்துள்ளார்.
அதில், எனக்கு 20 வயதிலேயே பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அந்த திருமணத்திற்காக ஜிஆர்டியில் கிட்டத்தட்ட ரூபாய் ஒரு கோடிக்கு மேல் என் கணவர் எனக்கு நகை வாங்கி கொடுத்தார். திருமணத்தின் போது நான் அணிந்திருந்த அனைத்தும் தங்கம் தான். தலை முதல் கால் வரை தலையில் குத்தும் ஹேர் பின் கூட தங்கத்தில் என் கணவர் எனக்கு வாங்கி கொடுத்தார். கல்யாணமாகி புகுந்த வீட்டிற்கு வரும் போதுகூட, நான் நடித்து சம்பாதித்து வாங்கிய நகை, சொத்து, பணம் என எதுமே எடுத்து வர வேண்டாம் என சொல்லிவிட்டார்.

நடிகை கவிதா: திருமணமான சில நாட்களிலேயே என்னுடைய பெயரில் பல சொத்துக்கள், கார், நகை என அனைத்தையும் வாங்கி குவித்தார். வருமானவரித்துறை சோதனை நடத்தும் அளவிற்கு பலவற்றை வாங்கி குவித்தார். ஆனால், அவை அனைத்திற்கும் முறையாக வரி செலுத்தி இருந்தார். அதைப்பார்த்து நானே ஆச்சரியம் அடைந்தேன். மகன் பிறந்த பிறகு சினிமாவிலிருந்து விலகி கணவன் குழந்தைகள் என நன்றாக தான் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இரண்டாவது மகள் பிறந்த சில நாட்களில் நானும் கணவரும் பேசிக்கொண்டே இருந்தோம். அப்போது, திடீரென அப்படியே சரிந்த விழுந்தார். உடனே மருத்துவமனையில் அவரை அனுமதித்தபோது அவரது மூளையில் பாதிப்பு இருப்பதாக சொன்னார்கள். இன்னும் 72 மணி நேரம் மட்டும் தான் உயிருடன் இருப்பார் என்று சொன்னார்கள்.
இடிந்து போனேன்: அந்த நொடி நான் அப்படியே உடைந்து போனேன். ஆனால், என்னுடைய நம்பிக்கையை நான் இழக்கவே இல்லை, அனைத்து முன்னணி நியூரோ மருத்துவர்களையும் வரவைத்து வைத்தியம் பார்த்தேன். அதன் 8 நாட்கள் கழித்து அவருக்கு நினைவு திரும்பி கவி என பெயரை சொல்லி அழைத்தார். பின் மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும், பக்கவாதம் வந்துவிட்டதால் அவரால் நடக்க முடியாமல் போய்விட்டது. மருத்துவர்கள் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என சொன்னார்கள். ஆனால், அவர் குணமடைந்தால் தான் வீட்டுக்கு அழைத்து செல்வேன் என பிடிவாதமாக இருந்து அவரை மீட்டு கொண்டு வந்தேன்.
எமனுடன் போராடினேன்: மருத்துவர்கள் உண்மையிலேயே மெடிக்கல் மிராக்கல் என சொல்லும் அளவிற்கு அவரே நான் மீட்டுக்கொண்டு வந்தேன். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு எமனுடன் போராடி, அவரின் உயிரை காப்பாற்றினேன். அதன் பிறகு 18 ஆண்டுகள் நானும் அவரும் வாழ்ந்தோம். ஆனால், இந்த கொரோனாவால் அவரை பறிகொடுத்து விட்டேன் என நடிகை கவிதா கண்ணீர் மல்காக கதறி அழுதார். நடிகை கவிதாவின் ஒட்டுமொத்த குடும்பமும் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நிலையில், மகன் மற்றும் கணவரின் நிலை மோசமானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைக்கு சென்ற இரண்டு நாட்களிலேயே மகன் உயிரிழந்துவிடு, அடுத்து சில நாட்களில் கவிதாவின் கணவர் உயிரிழந்தார்.


Click it and Unblock the Notifications











