என்னை நடிக்க தூண்டியவர் கமல்ஹாசன்தான்... மனம் திறந்த கோமாளி பட நடிகை!
சென்னை: தன்னை சினிமாவில் நடிக்க தூண்டியது நடிகர் கமல்ஹாசன்தான் என பிரபல நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் கோமாளி. இந்தப் படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் பஜ்ஜி கடை நடத்தும் பெண்ணாக நடித்திருந்தார் நடிகை கவிதா ராதேஷ்யம். கவிதா ராதேஷ்யம் பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

வெப் சீரிஸ்கள்
பாலிவுட் மட்டுமின்றி கன்னடா, மராத்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை கவிதா ராதேஷ்யம். வெப் சீரிகளிலும் தீவிரமாக நடித்து வருகிறார் கவிதா ராதேஷ்யம். அவரது நடிப்பில் வெளியான கவிதா பாபி, பூக், ராக்காயில், அஷுதி உள்ளிட்ட பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
எல்லாருக்கும் வணக்கம்
கவிதா நடிக்கும் வெப் சீரிஸ்கள் பெரும்பாலும் அடல்ட் கன்டென்ட்டாகவே இருக்கும். இந்நிலையில் நடிகை கவிதா ராதேஷ்யம், பிலிமி பீட் தளத்திற்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் தொடங்கும் போதே எல்லாருக்கும் வணக்கம் என தமிழில் பேசினார் கவிதா ராதேஷ்யம்.

கமல் சாரை பிடிக்கும்
அவர் பேசியிருப்பதாவது, தமிழில் பேச முயற்சி செய்கிறேன். தமிழ் மொழி கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். கமல் ஹாசன் சார் தான் என்னை நடிக்க தூண்டியவர் என் இன்ஸ்பைரேஷன் அவர்தான். கமல் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்காகவே தமிழ் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

பார்ட்டிக்கு போக மாட்டேன்
நான் அதிகம் பார்ட்டிக்கு போக மாட்டேன், ஃபிரண்ட்ஸ் கெட் டூ கெதர் , ஃபிரண்ட்ஸ் பர்த் டே பார்ட்டிக்கு மட்டும்தான் போவேன். மற்றப்படி வீட்டில் தான் இருப்பேன். மட்டன், ரைஸ், ரொட்டி தான் சமைத்து சாப்பிடுவேன் என்றார். மேலும் தான் நடிப்பது அடல்ட் படங்கள் இல்லை. கோமாளி படத்திற்கு பிறகு மக்கள் என்னை பார்க்க தொடங்கி விட்டார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கவிதா ராதேஷ்யம்.

கோ இன்சிடன்ட்
மேலும் தனது கவிதா பாபி வெப் சீரிஸ் குறித்து பேசிய கவிதா ராதேஷ்யம் டெல்லியில் அப்படி ஒருவர் இருந்ததாகவும் அவரது வாழ்க்கை முறையை பின்பற்றியே அந்த வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் அவருடைய பெயரும் கவிதா தன்னுடைய பெயரும் கவிதா என்று அமைந்தது கோ இன்சிடன்ட் என்றும் கூறினார்.

மறக்க முடியாத கமெண்ட்
தான் வெளியே சென்றால் மக்கள் அடையாளம் கண்டு கேட்பார்கள், வாழ்த்து கூறுவார்கள். ஆனால் தான் அதிகம் சோஷியல் மீடியாவில்தான் ரசிகர்களை சந்தித்து வருவதாகவும் கூறினார் கவிதா ராதேஷ்யம். மேலும் தன்னுடைய கவிதா பாபி வெப் சீரிஸை பார்த்த பிறகு ஒரு ரசிகரின் மனைவி திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு பிறகு கர்ப்பமானதாக கூறினார்.

அனுமதி இல்லாமல் தொடக்கூடாது
அந்த கமெண்ட்டை தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்றும் கூறினார் நடிகை கவிதா பாபி. மேலும் மது போன்ற தவறான பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பாலியல் வன்கொடுமை போன்ற எல்லா குற்றங்களையும் செய்வார்கள், பெண்களை எப்போதும் அவர்களின் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்றும் கூறினார்.

எங்களின் உடல்
மேலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கவிதா ராதேஷ்யம், எங்களின் உடல் நாங்கள் அனுமதி அளிக்கும் போதுதான் தொட வேண்டும் என்றும் கூறினார். இடையே நன்றி, வணக்கம் என ஓரிரு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்திய கவிதா மேலும் பல சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











