’அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி அரட்டை.. விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்.. குஷ்பு பேட்டி!

சென்னை: நடிகை குஷ்பு ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்த பேட்டியின் 2வது மற்றும் 3ம் பாகங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

V-CONNECT | KHUSHBOO CHAT PART-03 | குஷ்பு கொடுத்த அண்ணாத்த UPDATE | FILMIBEAT TAMIL

அண்ணாமலை, மன்னன் படங்களில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை தற்போது, அண்ணாத்த பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்தே பகிர்ந்து கொண்டது உள்பட பல சுவாரஸ்ய விஷயங்களை இந்த பேட்டியில் நடிகை குஷ்பு பேசியுள்ளார்.

கமல் மற்றும் ரஜினிகாந்த் உடன் அரசியல் ரீதியாகவும் தான் விவாதம் செய்துள்ளதையும் வெளிப்படுத்தி உள்ளார்.

தாஜ்மகால் கூட்டிட்டுப் போகல

தாஜ்மகால் கூட்டிட்டுப் போகல

நடிகை குஷ்புவின் கணவரும் இயக்குநருமான சுந்தர். சி திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகளில் குஷ்புவை தாஜ்மகாலுக்கு மட்டும் கூட்டிட்டு போகவில்லை என்ற குறையை கூறியுள்ளார். சமீபத்தில், பாரீஸ் ஈஃபிள் டவருக்கு அழைத்துச் செல்லும் போதும், 7, 8 பேர் என கும்பலுடனே சென்றதாகவும் கூறிய அவர், இரு முறை தாஜ்மகாலுக்கு செல்ல கிளம்பி ஏர்போர்ட் வரை சென்றுவிட்டு, சில பல காரணங்களுக்காக திரும்பியதையும் ஓப்பன் செய்துள்ளார்.

விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்

விசில் சொல்லிக் கொடுத்த விஜயகாந்த்

எங்கிட்ட மோதாதே, கருப்பு நிலா, வீரம் வெளஞ்ச மண்ணு மற்றும் சிம்மாசனம் உள்ளிட்ட பல படங்களில் கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கும் குஷ்புவுக்கு, வித விதமாக விசில் அடிக்க சொல்லித் தந்ததே விஜயகாந்த் தான் என்ற ரகசியத்தையும் மனம் திறந்து கூறியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இவரை விசில் அடிக்க சொல்லி கேட்பாராம்.

விஜய்யுடன் விளையாட்டு

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தில் நடிகை குஷ்பு முக்கியமான ரோலில் நடித்திருப்பார். குன்னூரில் ஒரே ஷெட்யூலில் நடந்த அந்த ஷூட்டிங்கின் போது, நடிகர் விஜய்யுடன் கார்ட்ஸ், ஷட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டுக்களை விளையாடிய நினைவுகளையும் குஷ்பு பகிர்ந்து கொண்டார்.

கிண்டல் செய்த ரஜினி

பட ஷூட்டிங்கின் போது நடிகை குஷ்பு ஒரு ஸ்டெப் ஆடுவதில் தப்பு செய்த போது, அதனை பல முறை, குஷ்பு அந்த ஸ்டெப்பா மிஸ் பண்ணிட்டா.. என சொல்லி ரஜினிகாந்த் கிண்டல் செய்த மறக்க முடியாத நினைவுகளையும், தற்போது அண்ணாத்த பட ஷூட்டிங்கின் போது, அண்ணாமலை, மன்னன் பட ஷூட்டிங்கில் நடந்த நினைவுகளை தன்னுடன் அப்படியே மறக்காமல் பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த் என்றும் மெய் சிலிர்க்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X