அந்த விஷயத்துக்காக தபுவிடம் சண்டை போட்டேன்.. மனம் திறந்த குஷ்பு.. வைரலாகும் பேட்டி!
சென்னை: நடிகை குஷ்பு ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு கொடுத்த பேட்டியின் 2வது மற்றும் 3ம் பாகங்கள் வெளியாகி வைரலான நிலையில், 4வது பாகமும் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
அண்ணாமலை, மன்னன் படங்களில் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள், மைக்கேல் மதன காமராஜன், சிங்கார வேலன் உள்ளிட்ட படங்களில் உலக நாயகன் கமலுடன் நடித்த கற்றுக் கொண்ட மறக்க முடியாத அனுபவங்களை இந்த பேட்டியில் நடிகை குஷ்பு பேசியுள்ளார்.

மேலும், விஜயகாந்த் குஷ்புவுக்கு விசில் அடிக்க சொல்லிக் கொடுத்த ரகசியத்தையும் ஓப்பன் செய்து இருந்தார்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் மீண்டும் அவருடன் நடிக்கும் சுவாரஸ்ய அனுபவங்களை பகிர்ந்துள்ள குஷ்பு 4ம் பாக பேட்டியில், அமிதாப் பச்சன் குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
இன்னமும் தனது வீட்டு வார்ட்ரோபில் அமிதாப் பச்சன் போஸ்டர் இருப்பதாகவும் அவர் மீது அந்த அளவுக்கு கிரஷ் என்றும் கூறியிருக்கிறார்.
குஷ்பு குழந்தையாக இருக்கும் போது அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்த நிலையில், ஹீரோயினான பின்னர், பல முறை அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், இந்த விரலை பிடித்துத் தான் நீ நடந்து வந்த, போய் வேற வேலையை பாரு, என்னுடன் ஜோடியாக நடிக்க முடியாது என்று அமிதாப் அங்கிள் தனது ஆசையை நிராகரித்து விட்டார் என்றும் புலம்பி தள்ளியுள்ளார்.
மேலும், சீனி கம் படம் பார்த்த பின்னர், நடிகை தபுவிற்கு போன் செய்து அவரை கண்டபடி திட்டியதாகவும், உனக்கும் எனக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் எப்படி அவருக்கு ஜோடியா நீ நடிக்கலாம் என சண்டை போட்டேன் என்றும், அமிதாப் பச்சனுடன் யார் ஜோடியாக நடித்தாலும் எனக்கு பிடிக்காது என்று மனம் விட்டு பல சர்ப்ரைஸான தகவல்களை நடிகை குஷ்பு பேசியிருக்கும் இந்த பேட்டியை மிஸ் பண்ணாமல் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!


Click it and Unblock the Notifications











