Kiran: வெளிப்படையாக கேட்பார்கள்.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கசப்பான அனுபவம்.. கிரண் வருத்தம்!
சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளவர் நடிகை கிரண்.
ஜெமினி படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்த கிரண், தொடர்ந்து பிரஷாந்த், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.

சில படங்களில் ஒரு பாடல்களுக்கு நடனமாட கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் விஷால், விஜய் ஆகியோருடன் இணைந்து குத்துப் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசிய கிரண்: நடிகை கிரண், தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பல மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக வலம்வந்தவர். தமிழில் விக்ரம் ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்த இவர் கொழுக் மொழுக் என்று இருந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தொடர்ந்து அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனுடன் அன்பே சிவம் மற்றும் பிரஷாந்துடன் வின்னர் போன்ற படங்களில் நடித்து வெற்றிப்பட நாயகியாக வலம்வந்தார்.
இதையடுத்து குண்டடித்திருந்த கிரணுக்கு ஒரு பாடல்களுக்கு நடனமாடவே வாய்ப்புகள் கிடைத்தன. அதையும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். விஜய், விஷாலுடன் திருமலை, திமிரு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து துணை கேரக்டர்களிலும் நடித்துவந்த கிரணுக்கு தற்போது அதிகமாக பட வாய்ப்புகள் இல்லை. இருந்தபோதிலும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக முத்தின கத்திரிக்காய் படம் வெளியானது. சுந்தர் சியுடன் இந்தப் படத்தில் பூனம் பஜ்வாவிற்கு அம்மா கேரக்டரில் நடித்திருந்தார் கிரண். இந்நிலையில் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கும் கசப்பான பல அனுபவங்கள் ஏற்பட்டதாக தன்னுடைய சமீபத்தய பேட்டியொன்றில் பேசியுள்ளார். இந்த அனுபவங்கள் தனக்கு மிகப்பெரிய அளவில் மன அழுத்தத்தை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய படங்களில் பிரபலமாக மாறிய பிறகு பாலிவுட்டில் நடிக்க போன கிரணுக்கு, அங்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க திரும்பியதாகவும் கிரண் தெரிவித்துள்ளார். படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ததும் சிலர் தங்களது சுயரூபத்தை வெளிக்காட்டியதாகவும் சர்வ சாதாரணமாக தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசுவார்கள் என்றும் கிரண் தன்னுடைய மன வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நேரங்களில் அதை தவிர்க்க அந்த இடத்திலிருந்து தான் வெளியேறிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். சமீப காலங்களாக திரைத்துறையில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த அனுபவங்களை நடிகைகள் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் இந்த பகிர்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையில், தற்போது நடிகை கிரணும் இந்த விஷயத்தில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











