கல்யாணம், குழந்தை பெத்துக்கணும்.. 8 வயசுலயே பிளான் பண்ணிட்டேன்.. குஷ்பூவின் மகள் பளிச் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் அனைவரும் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளான இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்பூ தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அவந்திகாவிற்கு அண்மையில் கோவாவில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இளைய மகளான அனந்திகா சுந்தர், தனது திருமண ஆசைகள் குறித்து மிகவும் சுவாரசியமான பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
8 வயதிலேயே திருமண ஆசை: அதில், எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாகவே இருக்கிறது. என் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும், என் கல்யாணம் எங்கே, எப்படி நடக்க வேண்டும், என் திருமணத்திற்கு நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதையெல்லாம் என்னுடைய எட்டு வயதிலேயே நான் பிளான் செய்து விட்டேன். நான் இதை சும்மா ஜோக்கிற்காகச் சொல்லவில்லை. என்னுடைய எட்டு வயதில் நான், அம்மா, என் அத்தை மற்றும் என்னுடைய கசின்ஸ் எல்லாருமே சேர்ந்து ஒரு குரூப்பில் இருந்தோம். அந்த குரூப்பிலேயே என்னுடைய இந்த திருமண பிளான்கள் பற்றி நான் ஏற்கனவே பகிர்ந்து விட்டேன் என்ற அனந்திகா, எனக்கு கல்யாணம், குழந்தைகள் வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் இப்பொழுது எனக்கு என்னுடைய வேலைதான் மிக முக்கியம் என்றார்.

தயாரிப்பாளராக: அனந்திகா சுந்தர் தற்பொழுது சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனமான 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இதன் மூலம், 'டபுள் அக்குபன்சி' என்ற திரைப்படத்தைத் தயாரித்து, சினிமா துறையில் தயாரிப்பாளராகத் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். ஒரு நாளில் 12 மணி நேரம் ஆண், 12 மணி நேரம் பெண் என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தங்கை தயாரிப்பாளராக என்ட்ரி கொடுக்க அக்கா அவந்திகா சுந்தர் திருமணம் செய்து கொண்டு 'அட்டாக்கர்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷின் மருமகன் பவிஷ் நாயகனாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications