ரெண்டு முட்டியும் போச்சு.. 50 நாளாக உயிருக்கு போராடிய அக்கா.. பறிதவிக்கும் குட்டிபத்மினி!
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டிபத்மினி, சிவாஜி, எம்ஜிஆர் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். பின்னாளில் பல படங்களில் நாயகியாக நடித்த குட்டி பத்மினி. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பல சீரியல்களை தயாரித்துள்ள இவர், கடைசியாக தென்பாண்டி சிங்கம் என்ற சீரியலை தயாரித்தார்.
சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் குட்டி பத்மினி அதில் பல நடிகர்கள், நடிகைகள் குறித்து பேசி வருகிறார். தற்போது, தனக்கு தாயாக இருந்த அக்காவின் மரணம் குறித்து கண்கலங்கி பேசியுள்ளார். அதில், செப்டம்பர் 28ந் தேதியை என் வாழ் நாளில் நான் மறக்கவே மாட்டேன். அன்று எனக்கு ஒரு ஃபோன் வந்தது. அதில், அக்கா ஒரு விபத்தில் சிக்கிவிட்டதாக சொன்னதும், நான் மிகவும் பயந்துவிட்டேன். உடனே, அந்த நபர் பெரிய அடி இல்லை. சிறிய விபத்து தான் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம் என்றார்.

அக்கா விஜி: நான் செல்வதற்கும் தாமதமாகும் என்பதால், என்னுடைய மகளுக்க ஃபோன் செய்து மருத்துவமனைக்கு அனுப்பினேன். அவள் சென்று என் அக்காவை பார்த்துவிட்டு கதறி அழுதபடி எனக்கு போன் செய்தாள். இது சிறிய விபத்து இல்லை அம்மா, ரெண்டு முட்டியும் கழண்டு தொங்குகிறது. அம்மா ரத்த வெள்ளத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னதும் நான் பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன் பார்த்து கதறி விட்டேன். உடனடியாக அக்காவை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றினேன். அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அக்காவிற்கு நல்லபடியாக சிகிச்சை கொடுத்தார்கள் ஓரளவிற்கு அக்கா குணமாகி வந்த நேரத்தில், திடீரென சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
முட்டி உடைஞ்சி போச்சு: அக்காவின் கணவரி இறந்து விட்டதால் அக்கா என்னுடன் தான் வசித்து வந்தார். கிறிஸ்துவ மதத்தின் மீது அவர்களுக்கு ஈடுபாடு இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை தோறும் அக்கா சர்ச்சுக்கு செல்வார்கள். அந்த சர்ச்சை சேர்ந்த அட்மினில் வேலை செய்யும் ஸ்டீபன் என்பவர் காரை ரிவர்சில் எடுக்கும் போது அங்கு அமர்ந்திருந்ததை பார்க்காமல் அக்காவின் மீது காலின் மீது மோதி இருக்கிறார். இதனால் அக்கா ரத்த வெள்ளத்தில் கிடந்துகிறார். இது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கும்போது, சாதாரண விபத்து தான் என கூறினார்கள்.
கண்ணீர் பேட்டி: ஆனால், இது சாதாரண விபத்தே இல்லை என ஸ்டீபன் மீது சர்ச் நிர்வாகத்திடம் புகார் அளித்தேன். ஆனால், அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகள், ஸ்டீபன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் தற்போது வரை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 50 நாட்களாக அக்கா பலவிதமான கஷ்டங்களுடன் அனுபவித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த, பத்து நாட்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார். எனக்கு அம்மாவாக இருந்தது மட்டுமில்லாமல் என் குழந்தைகளை வளர்ந்து அவர்களுக்கும் அம்மாவாக இருந்த என் அக்காவை இழந்து தவிக்கிறேன் என நடிகை குட்டிபத்மினி கண்ணீருடன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











