விட்டு பிரிந்த காதலி.. வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்த பாலைய்யா.. பிரபலம் சொன்ன காதல் கதை!

சென்னை: டோலிவுட்டின் ஆக்ஷன் நாயகன் பாலைய்யா குழந்தை நட்சத்திரமாக அவருடைய தந்தை இயக்கத்தின் மூலமாகவே சினிமாவுக்குள் வந்தார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து டோலிவுட்டின் முக்கியப் புள்ளியாக மிளிர்கிறார். அவருடைய படங்கள் பைசா வசூல் படங்களாகத் திரையரங்குகளில் அதிரடி காட்டி வருகிறது. பாலைய்யா என ரசிகர்கள் அன்பாக அழைக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் 2021ம் ஆண்டு அகண்டா திரைப்படம் வெளியாகி அதிக வசூல் செய்தது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அகண்டா இரண்டாம் பாகம் டிசம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது. போயபதி ஸ்ரீனு இயக்கி இப்படத்தில் பாலைய்யாவின் நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். போலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோவான நந்தமுரி பாலகிருஷ்ணாவை பற்றி பழம்பெரும் நடிகை குட்டிபத்மினி தனது யூடியூபில் பல விஷயத்தை பேசி உள்ளார்.

nandamuri balakrishna Balayya kutty padmini
Photo Credit:

நடிகர் பாலைய்யா: அதில், என்டி ராமாராவுடன் நான் பல படத்தில் நடித்து இருக்கிறேன். அப்போது தான் எனக்கு அவரின் மகன் பாலைய்யாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் அனைவரும் சிறுவர்கள் என்பதால், பாலைய்யா எங்களை அடித்துவிட்டு ஓடி விடுவார். இப்படி சின்னவயதிலேயே அவர் மிகவும் ரொம்ப சேட்டை செய்வார். ஒரு கட்டத்திற்கு மேல் என்டி ராமாராவ் முதலமைச்சராகி விடுகிறார். பாலைய்யா, பெரிய ஸ்டார் நடிகராகி விடுகிறார். இந்த நேரத்தில் தான் என்டி ராமாராவ் காதுக்கு, பாலைய்யாவும் விஜயசாந்தியும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கு என்கிற செய்தி வருகிறது.

நடிகை மீது காதல்: இதை கேள்விப்பட்ட ராமராவ், நேரடியாக விஜயசாந்தியை அழைத்து, பாலைய்யாவும், நீயும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்தி என் காதுக்கு வந்தது. அது உண்மையா, பொய்யா என்று எனக்கு தெரியாது. ஆனால், எந்த காரணத்திற்காவும், நாங்கள் வெளியில் இருந்து பெண் எடுக்க மாட்டோம், சொந்தத்தில் தான் பெண் எடுப்போம், எதுவும் எங்கள் சாதியில் தான் பெண் எடுப்போம், இதுக்கு மேல் இது தொடரக்கூடாது, அது உன் சினிமா வாழ்க்கைக்கும் நல்லது இல்லை என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். இதை புரிந்து கொண்ட விஜயசாந்தி, நமக்கு சினிமா தான் முக்கியம் என முடிவு செய்து, பாலைய்யாவை விட்டு விலகிட பாலைய்யா, விஜயசாந்தியை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறார். அதன்பின், என்டி ராமராவின் பேச்சை கேட்டு அவர் பார்த்து வைத்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.

தற்கொலை முயற்சி: பாலைய்யாவை பார்ப்பதற்கு தான், படபடவென்று பேசுவார். ஆனால், மனதில் எதையுமே வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசக்கூடியவர், பலருக்கு உதவி செய்யக்கூடியவர். சிறுவயதிலேயே பாலகிருஷ்ணா, நந்தி விருது, பத்மஸ்ரீ விருது, ஆந்திர அரசின் விருது, பிலிம்பேர் விருது என அவர் வீடு முழுக்க விருதுகளாகத்தான் இருக்கும். ஆக்ஷன் ஹீரோ என பெயர் எடுத்த பாலைய்யா, படப்பிடிப்பின் போது சண்டை காட்சியில் மேல் இருந்து குதித்ததில் அவரின் கால் எலும்பு முற்றிலுமாக முறிந்துவிட்டது. இதற்கு மேல் அவர் நடக்கவே வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டதால், மனம் உடைந்து போன பாலைய்யா தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரின் குடும்பத்தினர் அவரை மீட்டு கொண்டு வந்து இன்று மீண்டும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக இன்றைய இளம் ஹீரோக்கலுக்கு சவால் விடும் வகையில் கலக்கி வருகிறார் என்று குட்டி பத்மினி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X