பெண்களுக்கு முடிவெடுக்கும் உரிமை கூட தரமாட்றாங்க.. லக்ஷ்மி தேவி துறு துறு பேட்டி !
சென்னை: லக்ஷ்மி தேவி அமெரிக்க-இந்திய நடிகை ஆவார். முதல் முறையாக ஆனந்த் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான நில் கவனி செல்லாதே படத்தில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பின் 2015ல் நடிகர் சிவா இயக்கத்தில் வெளியான மசாலா படத்திற்கு திரைக்கதை எழுதி படத்திலும் நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் சில காட்சிகள் இன்றும் மக்கள் மனதில் உள்ளது.
Don't be afraid (Daro Mat) என்னும் குறும்படத்தை இயக்கி பலரின் பாராட்டுகளை பெற்றார் லக்ஷ்மி தேவி. பெண் ஒருத்தி பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சென்ற பிறகு ஏற்படும் சவால்கள் மற்றும் மெல்லிய உணர்வுகளை அழகாய் பதிவு செய்த குறும்படம். தமிழ் மற்றும் ஹிந்தி பேசும் இரண்டு குடும்பங்கள்- பார்க்க வேண்டிய நல்ல படம் .

முழு படம்
When The Music Changes என்னும் 47 நிமிட படம் லக்ஷ்மி தேவியின் இயக்கத்தில் வெளிவர உள்ளது. அதனை பற்றியும் மற்றும் பல கேள்விகளுக்கு துறுதுறுவென இந்த பேட்டியில் பதில் கூறியுள்ளார். இதை குறும்படம் என்று சொல்வதை விட பெரிய திரைக்கு செல்ல கூடிய ஒரு முழு படம் என்றே லட்சுமி சொல்லி வருகிறார் .

தமிழ் நாட்டில் படிப்பை
சென்னையில் மருத்துவ படிப்பை முடித்து இருக்கீங்க, வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் பண்ணி இருக்கீங்க உங்களுடைய Aim தான் என்ன என்ற கேள்விக்கு, நியூயார்க்ல பிறந்ததுல இருந்து தமிழ் நாட்டில் படிப்பை முடிச்ச வரைக்கும் புத்தகம் படிப்பது, நாடகம் நடிப்பது, நடனம் ஆடுவது என மல்டி டாஸ்கிங் ஸ்கில் சின்ன வயசுல இருந்தே இருக்கு என பதிலளித்தார்.

பாலினத்தை வைத்து
பெண் இயக்குனர் என்று மற்றவர்கள் பிரித்து கூறுவதை பற்றி அவரிடம் கருத்து கேட்டதற்கு, அந்த விஷயம் ரொம்பவும் வேடிக்கையாக உள்ளது எனவும், தான் Gender Neutral Profession ல் பணி செய்வதாகவும் சுட்டி காட்டியுள்ளார். பெண் இயக்குனர் என்று பாலினத்தை வைத்து பிரித்து சொல்லாமல் இயக்குனர் என்று சொல்வதையே விரும்புவதாக பதில் கூறியுள்ளார்.

கூடுதல் தகவல்
தனக்கு பிடித்த இயக்குனர்கள் , தனது சினிமா கனவுகள் , எடுத்த கொண்ட முயற்சி என்று இன்னும் பல கேள்விகளுக்கு துறுதுறுவென பதில் கூறியுள்ளார். தவறாமல் வீடியோவை கிளிக் செய்து பார்த்து மகிழுங்கள். நிறைய கூடுதல் தகவல்களையும் படத்தை பற்றியும் நிறைய பேசி உள்ளார் .


Click it and Unblock the Notifications











