96 படத்துல த்ரிஷாவை தவிர யார் நடிச்சிருந்தாலும் நல்லா இருந்திருக்காது - மஞ்சு வாரியர்

சென்னை: விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் நடிக்க முடியவில்லை, என்று, அசுரன் படத்தில் நடித்த நடிகை மஞ்சு வாரியர் தன்னுடைய அனுபவங்களை ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அசுரன் படம்கிறது தமிழ் சினிமா எனக்கு கொடுத்த என்ட்ரி பாஸ் தான். எல்லோரும் பண்றது மாதிரி நானும் பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும். ஏதாவது கொஞ்சம் வித்தியாசமா இருக்கணும்ல. அதனால தான் இவ்வளவு நாள் கழிச்சி வந்திருக்கேன். அது மட்டுமில்லாம எல்லாத்துக்கும் ஒரு டைம் இருக்குன்னு நான் நம்புறேன்.

Actress Manju Warrier Exclusive interview

இதுக்கு முன்னாடி ஏதோ காரணங்களால அது நடக்கலை. இப்போ அதே காரணத்தினால அது நடந்திடுச்சு. எது எப்போ நடக்கணுமோ அது இப்போ நடந்திடுச்சு. அதுக்கு தனுஷுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.

அசுரன் படத்தை பத்தி பேசுற ஒவ்வொரு வார்த்தையும், பச்சையம்மாவை பத்தி பேசுறதும், அசுரன் படத்துக்கு சமமான மதிப்புள்ளதா தான் நான் நினைக்கிறேன். அதை புதையல் மாதிரி மனசுல பதிவு பண்ணியிருக்கேன். நான் மலையாளத்துல இதுக்கு முன்னாடி படம் பண்ணி இருக்கேன். இருந்தாலும், முதல் தமிழ் படம் நடிச்சிருக்கேன்.

அதனால மக்கள் எப்படி ஏத்துக்குவாங்களோன்னு மனசுக்குள்ளாற ஒரே டென்ஷனா இருந்தது. படம் ரொம்ப நல்லா இருக்குன்னு எனக்கு தெரியும். இருந்தாலும், என்னை இந்த படத்துல எல்லாருக்கும் புடிக்கணுமேன்னு தான் எனக்கு பயமா இருந்தது. அசுரன் படத்துல எல்லாமே ஃபர்ஸ்ட் க்ளாஸ் டாப் க்ளாஸ்தான்.

படத்தோட டைரக்டராக இருந்தாலும், ஸ்டோரியா இருந்தாலும், நடிகர்களாக இருந்தாலும், கதையாக இருந்தாலும், புரொட்யூசரா இருந்தாலும் சரி எல்லாருமே பெஸ்டா தான் கொடுத்திருக்காங்க. அதனால நான் இந்த படத்துல வீக்கா இருந்துடக்கூடாதேங்குறது தான் என்னோட பயமா இருந்தது. ஆனா, இப்போ படம் நல்லா வந்திருக்குன்னு பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

அதனால, இனிமேல் படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி நல்ல வார்த்தையை கேட்கணும்னு எதிர்பார்த்தேன். ஏன்னா ஆடியன்ஸ் வந்து படத்துல என்னை தவிர மத்த எல்லோருமே நல்லா நடிச்சிருக்காங்கன்னு சொல்லிடக்கூடாதுல்லையா. அதனால தான் இந்த படத்துல நான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னோட உழைப்பை கொடுத்தேன். கடவுள் கிட்டேயும் வேண்டிக்கிட்டேன்.

துபாய்ல நடந்த ஒரு அவார்டு ஃபங்க்ஷன்ல, நான் மொதல்ல அவார்டு வாங்கிட்டு வரும்போது, பின்னாடியே வந்த விஜய் சேதுபதி, என்கிட்டே வந்து, மேடம், உங்களை ஒருத்தர் பாக்கணும்னு சொல்றாருன்னு சொல்லிட்டு, ஒருத்தரை இன்ட்ரொடியூஸ் பண்ணினார். அவர் தான் 96 படத்தோட டைரக்டர் பிரேம் குமார்.

அவர் என்கிட்ட வந்து, மேடம் நான் உங்களோட தீவிரமான ரசிகர். 96 படத்துல உங்களை நடிக்க வைக்கிறதுக்கு ரொம்ப ட்ரை பண்ணினேன். ஆனா, அது உங்களுக்கே தெரியாதுன்னு சொன்னாரு. அதைக் கேட்டு நான் ஷாக்காகி நின்னுட்டேன். என்ன சொல்றீங்க, எனக்கு இது தெரியவே தெரியாது. எங்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் நான் ஓடோடி வந்திருப்பேனேன்னு சொன்னேன்.

அவங்க யார்கிட்டயோ காண்டாக்ட் பண்ணி பேசியிருக்காங்க. விஜய் சேதுபதியோட டேட் கிடைக்கிறதுல கொஞ்சம் கன்ஃபியூஸ் ஆயிடிச்சி. டைட் ஷெட்யூல் சூட்டிங் இருந்தது. அந்த நிலைமையில அந்த கன்ஃபியூஸ் ஷெட்யூலுக்கு என்னையும் இழுத்து கொண்டு வர்றதுக்கு தயங்கி இருக்காங்க. அப்போ தான், என்ன சார் ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நான் வந்திருப்பேனே சார் அப்படின்னு சொன்னேன்.

இருந்தாலும், யாருக்கு என்ன கிடைக்கணுமோ அது கண்டிப்பா கிடைக்கும். ஆனால், 96 படத்துல த்ரிஷாவை தவிர யார் நடிச்சாலும், அந்த அளவுக்கு வந்திருக்காது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X