தங்கையாக நடிக்கலாம்.. ஆனா எப்பப் பார்த்தாலும் அப்படியே.. எப்படி.. மோனிஷா பளிச் பேட்டி!

சென்னை : ஆர்யாவின் தங்கையாக நடித்தவங்க எம்.சி.மோனிஷா இப்போ என்ன பண்றாங்க பாக்கலாமா.

எம் சி மோனிஷா கோவாவில் பிறந்தவர் இப்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார் இவர் சிறந்த தொகுப்பாளினி பல ஊடக துறைகளில் தன்னுடைய பேச்சு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார். மோனிஷா இளங்கலை காட்சித்தொடர்பியலும் முதுகலை ஊடக மேலாண்மையும் படித்து உள்ளார்.

Actress Mc monisha interview

மோனிஷா அனைத்து விதமான திறமை கொண்டவர் இதனால் இவரின் பொழுதுபோக்கு நடனம், பாட்டு , இசையைக் கேட்பது, பயணம் மற்றும் ஓவியம் என்று கலை ரீதியாக இருக்குமாம் மேலும் நெட்வொர்க்கிங் மற்றும் சமூகமயமாக்கள் போன்ற பல விஷயங்களை பொழுதுபோக்காக சிறப்பான அளவில் கற்று தனது வாழ்வில் பயன்படுத்தி கொள்ளும் திறமை கொண்டவர் மோனிஷா .

2008 முதல் தென்னிந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் வி.ஜே மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கார்ப்பரேட் நிகழ்வுகளை கையாளுதல் திறமை, மற்றும் விரைவான சிந்தனை, வெவ்வேறு ஆர்வக் குழுக்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் படைத்தவர். மேலும் பிறந்த நாள், திருமணங்கள், இசை, கெட் டூகெதர்ஸ் போன்ற சுவாரசியமான நிகழ்வின் தொகுப்பாளினி என்றும் பல விதத்தில் தன்னை பரபரப்பாகி கொண்டு உள்ளார்.

மோனிஷா அனைவராலும் அறியபடுவது இயக்குனர் ராஜேஷ் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவின் தங்கை கதாபாத்திரதில் நடித்ததன் மூலம் தான். அதனை தொடர்ந்து இவர் திரு திரு துறு துறு படத்தில் தனது கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து இருப்பார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் சற்று விலகி டாக் ஷோ என்ற நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகினார்.

Actress Mc monisha interview

மோனிஷாவிற்கு தமிழ் சினிமாவில் தங்கையாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்தாலும் அவர் அதனை நிராகரித்து வருகிறார். காரணம் என்னவென்றால் தங்கையாக நடிக்கலாம் ஆனால் தங்கையாகவே நடிக்க முடியாது , தங்கையாக நடித்த பல நடிகைகள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று பல இயக்குனர்களிடம் கூறி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் மோனிஷா. அசத்தலான தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச தெரிந்த மோனிஷா இப்போது பல விளம்பர படங்கள், குறும்படங்கள் என்று தேர்ந்து எடுத்து நடிக்க ஆரம்பித்து உள்ளார்.

Actress Mc monisha interview

மோனிஷா சமீபத்தில் நடத்திய டாக் ஷோ நிகழ்ச்சியில் ஹாப்பி டைரீஸ் மற்றும் டின்சல் டைரி பிளானர்ஸ் என்ற நேர்காணல் காட்சி தற்போது சமூக வளையதளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது. கொரோனா பற்றி நிறைய விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி வரும் மோனிஷா , சினிமாவிலும் வைரலாக வேண்டும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் ஆசை முயற்சிகள் வெற்றி பெறுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X