இரண்டாவது திருமணம்? கர்மா யாரையும் சும்மாவிடாது.. எல்லாரும் அனுபவிப்பாங்க.. மீனா பேட்டி!
சென்னை: 90 கால கட்டத்தில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை மீனா, ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, அர்ஜூன், பிரபுதேவா, அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீனா 'சீக்ரெட் ஸ்டோரீஸ் ரோஸ்லின்' என்கிற இணையத்தொடரில் நடித்துள்ளார்.
இயக்குநர்த சுமேஷ் நந்தகுமார் இயக்கியுள்ள இந்த வெப் தொடர், பிப்ரவரி 27 ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இதுகுறத்து IndiaGlitz Tamil யூடியூப் சேனலுக்கு நடிகை மீனா பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த தொடரில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தைரியமாக அனைத்து முடிவுகளையும் எடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது ஒரு த்ரில் கதை என்பதால், த்ரில்லர் கதைகளில் இருப்பது போல,ட்விஸ்ட், திகில் லூட்டும் காட்சிகள் என அனைத்தும் இருக்கும். இந்த கதையை கேட்டதும் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. குறிப்பாக என் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்ததால் கதையை கேட்டதும் ஒகே சொல்லிவிட்டேன். பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நான் நடித்து இருந்தாலும், இந்த கதாபாத்திரம் ஒரு வித்தியாசமானதாக இருக்கும் என்றார்.
இரண்டாவது திருமண வதந்தி: இதைத்தொடர்ந்து இரண்டாவது திருமணம் குறித்த வதந்தி பற்றி பேசிய மீனா, இப்போது வரைக்கும் எனது இரண்டாவது திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. முன்பு இதுபோல பல வதந்திகள் வரும் அதையெல்லாம் என்னுடைய காதுக்கு வரவே வராது. ஆனால், இப்போது அப்படி இல்லை ஒரு செய்தி வந்து விட்டால் போதும், அதே வகையில் பல செய்திகள் வருகிறது. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் அவளும் இது போன்ற செய்திகளை எல்லாம் பார்ப்பார் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

கர்மா சும்மாவிடாது: அவர்கள் சொல்லும் விஷயத்தில் உண்மை இருந்தால் பரவாயில்லை. ஆனால், எதுவுமே தெரியாம நான் ஒரு நடிகை, பெண் என்பதால், கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். இதைபார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாகவும், ஆத்திரமாகவும் இருக்கும். அந்த செய்தியில் உண்மை இருந்தால், எழுதுவதில் தவறு இல்லை. ஆமாம், உண்மைதான் என நானே சொல்லிவிடுவேன். ஆனால், அதில் உண்மை இல்லாத போது நேரில் பார்த்தது போல எழுதுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் கர்மாவை நம்புகிறேன், கர்மா அவர்களை சும்மாவிடாது. ஏன் என்றால், என்னை சுற்றி இருந்தவர்கள் எனக்கு என்ன செய்தார்கள், அதனால் அவர்கள் என்ன அனுபவித்தார்கள் என்பதை நான் என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். இதற்கு மேலும் அதை நான் பார்ப்பேன்.

வேதனை: திடீரென இணையத்தில் மீனாவுக்கு இரண்டாவது திருமணம் என செய்தி வரும், ஒரு செய்தியை பார்த்து பலரும் அதேபோல செய்திகளை போடுவார்கள். பின் அவர்களே நிறுத்தி விடுவார்கள். இரண்டாவது திருமணம் வேண்டுமா? திருமணத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை நான் தான் வெளியில் சொல்ல வேண்டும். ஆனால், என்னைத் தவிர அனைவரும் எனது திருமணத்தைபற்றி பேசுகிறார்கள், எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள் என மீனா அந்த பேட்டியில் மன வருத்தப்பட்டு பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











