என் கணவருக்கு நான் சடங்கு பண்ணேன்.. என்னென்ன பேசுனாங்க தெரியுமா? மனம் நொந்த நடிகை மீனா!
சென்னை: பிரபல நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் வித்யாசாகரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறாள். நடிகை மீனாவின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அப்போது அவரின் இறுதிச்சடங்கை மீனா செய்தது குறித்து எழுந்த விமர்சனத்திற்கு மீனா, அளித்துள்ள பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. சிவாஜி கணேசன் முதன் முதலில் மீனாவை ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்து, அவரின் சுட்டித்தனத்தை பார்த்து பிடித்துப்போக, அதன் பிறகு தான் நெஞ்சங்கள் படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் பின் ஒரு சில படத்தில் நடித்த மீனா, 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் ரஜினிகாந்துடன் நடத்தார். வளர்ந்த பின் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்தார். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்த தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிய மீனா, எஜமான், அவ்வை சண்முகி, முத்து, ராஜகுமாரன், நாட்டாமை என அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்தார்.

நடிகை மீனா: இதன் பின் இவர் பெங்களூருவை சேர்ந்த மென்பொறியாளர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கோட்டூர்புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மட்டுமின்றி, இவரது தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகா ஆகியோருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதிலிருந்து மீண்ட வித்யாசாகர், கொரோனாவுக்கு பின் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். 48 வயதான வித்யாசாகரின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நுரையீரல் பாதிப்பு: வித்யாசாகரின் பெங்களூர் வீட்டிற்கு அருகே அதிகளவு புறாக்கள் வளர்க்கப்பட்டதாகவும்,எச்சம் பட்ட காற்றை சுவாசித்ததால் நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும் அப்போதிலிருந்தே அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கொரோனாவால் அவர் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு கோட்டூர் புரத்தில் உள்ள மீனாவின் வீட்டில் நடைபெற்றது. இவரின் இறுதி சடங்கை மீனா மற்றும் அவரது மகளும் செய்தனர். இது அப்போது பேசு பொருளானது.

யாருக்கு என்ன பிரச்சனை: இதுகுறித்து அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை மீனா, அந்த நேரத்தில் என்னை சுற்றி என்ன நடக்கிறது, யார் என்ன பேசுகிறார்கள், என்று எனக்கு எதுவுமே தெரியவில்லை. ஆனால், அதற்கு பிறகு தான், மீனா எப்படி இறுதி சடங்கு செய்யலாம் என்று வந்த விவாதத்தை பார்த்தார். அவர் என்னுடைய கணவர், அவருக்கு நான் இறுதி சடங்குகளை செய்கிறேன் இதில் யாருக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியவில்லை. என் மனத்திற்கு சரி என்று பட்டதை நான் செய்தேன். இதை ஒரு விவாதமாக, ஒரு சர்ச்சையாக ஆக்குவார்கள் என்று எனக்குத் தெரியாது. என் கணவருக்காக செய்தேன் அவ்வளவு தான் என்று நடிகை மீனா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











