முன்னாடியே கேட்டிருந்தா இந்த படம் பண்ணியிருக்க மாட்டேன்.. ஒரு பக்க கதை குறித்து மேகா ஆகாஷ் பேட்டி!

சென்னை: வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகி உள்ள ஒரு பக்க கதையின் நாயகி மேகா ஆகாஷ் அளித்துள்ள பேட்டி சில பாகங்களாக வெளியாகி வைரலாகி வருகின்றன.

Recommended Video

இந்த SCRIPT முன்னாடியே கேட்டிருந்தா பண்ணிருக்கமாட்டேன் | MEGHA AKASH CHAT PART - 01 | Filmibeat

மேகா ஆகாஷ் உடன் அவரது அம்மாவும் சர்ப்ரைஸ் ஆக பேட்டி அளித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

கல்லூரி முடித்த கையோடு

கல்லூரியில் விஸ்காம் படித்து முடித்த கையோடு மேகா ஆகாஷ் நடித்த படம் தான் ஒரு பக்க கதை. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணிதரண் இயக்கத்தில் உருவான இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியானது.

வித்தியாசமான கதை

5 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரிலீசாக வேண்டிய இந்த பக்கம் நீண்ட தாமதத்திற்கு பிறகு தற்போது தான் ரிலீசாகி உள்ளது. மேகா ஆகாஷ் மிகவும் சின்னப் பொண்ணாக இந்த படத்தில் இருப்பதை பார்த்து தற்போடு அவரே ஆச்சர்யமும் சந்தோஷமும் படுவதாக கூறியுள்ளார். இதுவரை பேசப்படாத ஒரு கதையை முதல் முறையாக இயக்குநர் பாலாஜி தரணிதரண் கையில் எடுத்துள்ளார்.

படம் பண்ணியிருக்க மாட்டேன்

தனது பேட்டியில் பேசிய மேகா ஆகாஷ், முன்னாடியே இந்த படத்தின் கதையை கேட்டிருந்தால் பண்ணியிருக்க மாட்டேன். ஆனால், பாலாஜி தரணிதரன் சார் தான் நல்லா கதையின் ஆழத்தை புரிய வைத்து தன்னை நடிக்க சம்மதித்தார். கதை சீரியஸாக போனாலும், செட்டில் நாங்க எல்லாருமே காலேஜுக்கு வந்த மாதிரியே ஜாலியா இருப்போம் என்றார்.

மேகா ஆகாஷ் அம்மா பேட்டி

மேகா ஆகாஷ் அம்மா பேட்டி

மேகா ஆகாஷ் அம்மாவும் தனது மகளை பற்றியும் சினிமா பற்றியும் சர்ப்ரைஸாக பேட்டி கொடுத்துள்ள பாகமும் வெளியாகி உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷுடன் எனை நோக்கிப் பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் மேகா ஆகாஷ் நடித்தது குறித்தும் அவரது இயல்பு குறித்தும் ஏகப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ள இந்த பேட்டியை மறக்காமல் பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X