For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நைட் முழுக்க நடிச்சி வேஸ்ட் ஆயிடுச்சி..காலைல மறுபடியும் அதே சீன் எடுத்தாங்க-மிருணாளினி !

  |

  சென்னை : சமீபத்தில் வெளியான ஜாங்கோ திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. டைம் லூப்- என்ற ஒரு களத்தில் மீண்டும் ஓர் முத்திரை பதித்துள்ளது தமிழ்த்திரை உலகம்.

  தமிழில் முதல் Time Loop படம் இதுதான் | Actress Mirnalini Ravi Exclusive | Jango | Filmibeat Tamil

  ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் இசையும் மிரளவைத்துள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். புதுமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் முதல் படத்திலேயே வெற்றிக்கனியை பறித்துள்ளார்.

  தனுஷின் அடுத்த படமும் ஒடிடி ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்!தனுஷின் அடுத்த படமும் ஒடிடி ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்!

  இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொண்டார் ஜாங்கோ நாயகி மிருணாளினி.

  எல்லா க்ரெடிட்ஸும்

  எல்லா க்ரெடிட்ஸும்

  கேள்வி : யாருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்ல விரும்புறீங்க?

  பதில் : DAY 01 ல இருந்தே, என்னோட லுக்ல ரொம்ப அழகா இருக்கனும், காஸ்ட்யூம் சிறப்பா இருக்கனும்ன்னு, எல்லாத்துலயும் டைரக்டர் ரொம்பவே உறுதியா இருந்தார். லேட் நைட் ஷூட் சில சமயத்துல போச்சு. அடுத்த நாள் ஷூட் இருந்தபோ, எல்லாம் முடிச்சிட்டு அவுட் பார்த்தப்ப ரொம்ப டயர்டா இருந்துச்சுன்னு மருபடியும் ரீ ஷூட் ல்லாம் வச்சிருந்தாங்க. அந்த அளவுக்கு பர்பெக்‌ஷன் பாக்கும் டைரக்டர். அவருக்குதான் எல்லா க்ரெடிட்ஸ்-ம், நன்றிகளும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

  அப்பவே தோணுச்சு

  அப்பவே தோணுச்சு

  கேள்வி : இந்த படம் இந்த அளவு வெற்றிய குடுக்கும்ன்னு முன்னாடியே தெரியுமா?

  பதில் : இன்று நேற்று நாளை, பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் இந்த படங்கள் எல்லாத்துக்கும் ரிலீஸ் க்கு அப்பறம் நல்ல வரவேற்பு இருந்துச்சு. மக்களும் நிறைய ஆதரவு குடுத்துருந்தாங்க. இன்னமும் மக்கள் நிறைய பேர் அந்த படங்கள ரசிச்சி பாக்குறாங்க. அந்த ப்ரொடக்‌ஷன் ல, இப்படி ஒரு படம் வருதுங்கிறப்ப நிச்சயமா நல்ல வரவேற்பும் வெற்றியும் இருக்கும்ன்னு நெனச்சோம். அதே போல வெற்றியும் கிடைச்சிருக்கு

  அதுவே ரொம்ப சந்தோஷம்

  அதுவே ரொம்ப சந்தோஷம்

  கேள்வி : உங்க நடிப்பை பார்த்துட்டு சிவி குமார் என்ன சொன்னார்?

  பதில் :இந்த படம் புக் ஆனப்போ, நான் சினிமாவுக்கு புதுசு. சூப்பர் டீலக்ஸ் முடிச்சதுக்கு அப்பறம் உடனே கமிட் ஆன படம் இது. சிவி குமார் படம், அவுட் புட் ல்லாம் பார்த்துட்டு, ஒரு அனுபவமில்லாத புது நடிகை மாதிரியே இல்ல. ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாரு. அவ்ளோ பெரிய ப்ரொட்யூசர் பாராட்டுனதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

  எத்தன தடவ துப்பாக்கில சுட்டாங்க?

  எத்தன தடவ துப்பாக்கில சுட்டாங்க?

  கேள்வி : உங்கள படத்துல சுடுற மாதிரி, நீங்க நிறைய பேர அறையற காட்சிகள் அதிகம் இருந்துச்சே?

  பதில் : ஆமா. ஆனா எத்தன தடவ சுட்டாங்கன்னு ல்லாம் எண்ணல என்று சிரித்து கொண்டே பதில் அளித்தார் . 'நடந்தது ஒருதடவ.. நடந்தத நெனச்சி பாக்குறப்ப ஒருதடவ'ன்னு பல தடவ சுட்டுருப்பாங்க.. இப்பதான் தோனுது. நிச்சயம் மறுபடி பாத்துட்டு எண்ணி பக்காவா சொல்றேன். என்னுடைய இந்த போல்டான கதாபாத்திரம் எத்தனை பேர் எதிர்த்தாலும் தைரியமாக எதிர்கொள்ற தில்லான பொண்ணு .

  சவுண்டு அப்படி

  கேள்வி : இந்த படத்தை எல்லாராலும் புரிஞ்சிக்க முடியுமா ?

  பதில் : புரிஞ்சிக்க முடியாத கதையெல்லாம் ஒன்னும் இல்ல. ரொம்ப எளிமையான நல்ல கதை, படம் தான். நிச்சயமா போரடிக்காத, தியேட்டர்ல சீட்ட விட்டு எழுந்து போகவிடாத விருவிருப்பான படம்தான். திரைக்கதை, காட்சி எல்லாமே ரொம்ப அருமையா இருக்கும். இது தியேட்டர் எபக்ட்-ல பார்க்க வேண்டிய படம். அப்பதான் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். ஜிப்ரான் அந்த அளவுக்கு சிறப்பா இசையமைச்சிருக்காரு. கண்டிப்பா எல்லாரும் தியேட்டர்ல போயி பாருங்க. மத்தபடி இந்த படத்துல சொல்லப்பட்டுருக்கிறது புதுவிஷயமே தவிர, புரியாத விஷயம் கிடையாது என்று மிகவும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியோடும் பலவிஷயங்களை பகிர்ந்து கொண்டார் மிருணாளினி. இந்த வீடியோ பேட்டியை முழுமையாக பில்மி பீட் தமிழ் யுட்யூபிலும் பார்க்கலாம் .

  English summary
  Actress Mirnalini Ravi Shares the Experience of Jango Tamil Movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X