Mumtaj :அப்படி நடிச்சது மறந்துபோச்சா? பணம் வேண்டாம் ‘அல்லா‘ போதும்? நடிகை மும்தாஜ் பேட்டி!

சென்னை: டி.ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மும்தாஜ். அதன் பின்னர், குஷி, சாக்லெட், லூட்டி, மலபார் போலீஸ், ஏழுமலை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கிளாமல் காட்சியில் தயக்கமே இல்லாமல் ரசிகர்களுக்கு காட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய வந்த மும்தாஜ் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிய தற்போது, முழுக்க முழுக்க இறைவழிபாட்டிலும் ஆன்மீகத்திலும் இறங்கிவிட்டார்.

அவர் Behindwoods TV யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில், இறைவன் மீது எனக்கு இவ்வளவு ஈடுபாடு ஈசியாக வரவில்லை. என்னுடைய வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக அல்லாஹ் என்னுடள் கலந்து வந்தார். நான் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தபோது கடுமையாக உழைக்கிறோம் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருக்கிறது என்று தான் நான் நினைத்துக் கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் லண்டனில் பேட்டியளித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் முஸ்லிமாக இருக்கும் நீங்கள் இப்படி கவர்ச்சியாக நடிக்கலாமா? என கேட்டார், அன்றில் இருந்து என் மனதிற்குள் இந்த கேள்வியை எழுந்து கொண்டே இருந்தது. புர்கா அணிந்து இருக்கும் மற்ற இஸ்லாமிய பெண்களை பார்க்கும் பொழுது எனக்கு வெட்கமாகவும் இருக்கும். அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் நான் என நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

Mumtaj interview
Photo Credit:

நடிகை மும்தாஜ்: என்றாவது ஒருநாள் நான் கடவுள் இடம் சென்றுதானே ஆக வேண்டும் என என்ற கேள்வி என் மனதிற்குள் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. ஒருநாள் அதை நோக்கி நான் நடக்க ஆரம்பித்தேன். இதற்கு முன் நான் இறைவனைப் பற்றியும், குர்ஆனை பற்றியும் பல விஷயங்கள் தெரியும். ஆனால், அதை நான் என் மனதிற்குள் உள்வாங்கிக் கொள்ளவில்லை அதன் பிறகு குர்ஆனை பற்றியும் அதில் இருக்கும் விஷயங்களைப் பற்றியும் என் மனதிற்குள் உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தேன். அன்றிலிருந்து நான் அதை நோக்கிய நடக்க ஆரம்பித்தேன். அப்போது அல்லா என்னை ஏற்றுக்கொண்டார்.

அப்படி நடிச்சது மறந்துபோச்சசா?: இத்தனை வருடமாக சினிமாவில் கவர்ச்சியாக நடித்து விட்டு, இப்பொழுது அல்லா... அல்லா என்று சொன்னால் சரியா? என பலர் கேட்கிறார்கள். அப்படி என்னை அந்த பாதைக்கு கொண்டு சென்றதும் அல்லா தான். இன்று அதிலிருந்து என்னை நல்வழிப்படுத்தி என் கண்களை திறந்து வைத்ததும் அல்லா தான். நான் படப்பிடிக்கு செல்லும்போது புர்கா அணிந்து கொண்டுதான் செல்வேன். படப்பிடிப்பில் எனக்கான கதாபாத்திரம் என்னவோ அந்த கதாபாத்திரத்திற்கான உடையை அணிவேன். அது என்னுடைய தொழில் அதை நான் செய்தேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு தான். என்னை தவறுகளை மன்னித்து அல்லா என்னை ஏற்றுக்கொள்வாரா என நினைத்தேன் . அல்லா என் தவறுகளை மன்னித்து என்னை மனதார ஏற்றுக்கொண்டார். இந்த நேரத்தில் சினிமா வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் ஒரே அடியாக அவற்றையெல்லாம் நான் ஒதுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றிலிருந்து விலகி விட்டேன். எனக்கு பணம் தேவையில்லை என் இறைவன் என்னுடன் இருக்கிறார் என்று நடிகை மும்தாஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X